திருப்பனந்தாள் சிவன்கோயிலின் லிங்கம் ஒரு சமயம் சாய்ந்தே இருந்தது. தாடகை என்ற பெண் பூஜையின்போது இறைவனுக்கு சாத்த மாலையைக் கையில் எடுத்தாள். அப்போது அவள் ஆடை நெகிழ, ஆடையை, ஒழுங்கு செய்வதா? அன்றி கையில் எடுத்த மாலையை இறைவனுக்குச் சாத்துவதா? என தாடகை தத்தளித்தாள். அந்த தர்மசங்கட நிலையில் தானே வளைந்து அவளிடம் மாலையை லிங்கம் ஏற்றுக்கொண்டது என்பது தலவரலாறு. அப்படி வளைந்த லிங்கத்தை சோழ ராஜனின் யானைப்படை கூட நிமிர்த்த முடியவில்லை. படைவீரர்கள் மயக்க முற்று சரிந்தனர். இந்நிலையில்தான், குங்கிலியக்கலய நாயனார் தம் கழுத்தில் கயிறு கட்டி, மறு பக்கத்தில் லிங்கத்தில் கட்டி இழுத்து லிங்கத்தை நேராக்கினார்.