காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ளது குமரக்கோட்டம் முருகன் கோயில். இக்கோயிலில் முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிக்கிறார். பிரணவத்தின் பொருளறியாத பிரம்மனை முருகன் சிறையிலடைத்தார். அதன்பின், பிரம்மனின் ருத்ராட்ச மாலை, கமண்டலத்தைப் பெற்று பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். அது இத்தலத்தில் நடத்தியதாக நம்பிக்கை. மேற்கு நோக்கியுள்ள இவரை தரிசித்தால் பிரம்மா. விஷ்ணு, சிவனை தரிசித்த பலன் கிடைக்கும். எனவே, இவரை ஒருவரில் மூவர் என விசேஷ பெயரிட்டு அழைப்பர்.