காஞ்சிபுரம் நெல்லுக்கார வீதியில் உள்ளது சித்ரகுப்தர் கோயில். இவர் கேதுவின் அதிதேவதை சித்ரகுப்தருக்கு 200 கிராம் கொள்ளு. 200 கிராம் உளுந்து, பல வண்ணங்களில் துணி வைத்து அர்ச்சனை செய்து வழிபட, கேதுவால் ஏற்படும் தோஷங்கள் விலகும். தொடர்ந்து ஐந்து பவுர்ணமிகள் இவரை வழிபட திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.