வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் புகளூர் மேகப்பலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மங்கள மகா தீபாராதனை விழா நடந்தது.பொதுவாக ஆடிமாதம் சுபகாரியங்கள் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வரும் நிலையில், இம்மாதம் பல்வேறு மக்களும் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை நிலவிவருகிறது. இதையடுத்து உலகமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று புகளூர் மேகப்பலீஸ்வரர் பிரதோஷ குழு ஆன்மீக பக்தர்கள் சார்பில் நந்திக்கு பால், இளநீர், பண்ணீர், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட பல்வேறு திரவிய பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.