புதுச்சேரி : மேரி உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பர்வதமலை மகான் மவுனயோகி அருட்பேரவை சார்பில் உழவாரப் பணி நடந்தது.பேரவை நிறுவனர் பூங்காவனம் தலைமை தாங் கினார். சிவராஜன், பூபாலன் முன்னிலை வகித்தனர். பொன்னுசாமி வரவேற்றார். கோவிலில் உள்ள பூஜைப் பொருட்கள், திருவாட்சிகள், விளக்குகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.பேரவை உறுப்பினர்கள் கோவில் வளாகத்தில் இருந்த செடி கொடிகளை வெட்டி அகற்றினர். மேலும், பாரிஜாதம், முல்லை போன்ற 75க்கும் மேற்பட்ட செடிகளை கோவில் வளாகத்தில் நட்டு, நந்தவனம் அமைத்தனர். பச்சையப்பன் தலைமையில், கோவிலில் தேவையான இடங்களில் சிமென்ட் வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.நிகழ்ச்சியில், 12ம் ஆண்டு மோர் பந்தல் விழாவில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.