அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2015 12:11
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப் பெருமாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று மாலை, 7.30 மணிக்கு, கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மலையில் உச்சிபிள்ளையார் கோவில் என்றுஅழைக்கபடும் பாண்டீஸ்வரர் ஆலயத்தில், 16ம்ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.