பதிவு செய்த நாள்
26
நவ
2015
12:11
திருப்பூர் : திருப்பூர், லட்சுமி நகரிலுள்ள ஆதிபராசக்தி கோவிலில், கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் பக்தர்கள் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலசங்களில் புனித நீரூற்றி சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. பெண்கள், ஆண்கள் என, 1,000 பேர் மாலை அணிந்தனர். சக்தி பீட நிர்வாகிகள், பக்தர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர். கம்ப்யூட்டர் பயிற்சிபொங்கலூர் அவினாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில், பிறப்பு - இறப்பு பதிவு செய்தல் சம்பந்தமான ஒரு நாள் கம்ப்யூட்டர் பயிற்சி நடந்தது.பிறப்பு, இறப்பு பதிவு அலுவலக உதவி இயக்குனர் தேவி, பயிற்சியை துவக்கி வைத்தார். கல்லூரி கம்ப்யூட்டர் துறை தலைவி ராஜலட்சுமி வரவேற்றார்.கல்லூரி தலைவர் தங்கராஜ், பொருளாளர் கோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.