திருமலைக்கேணி: திண்டுக்கல் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. காலையில் ஸ்தல மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதன்பின் லட்சார்ச்சனை, பூர்ணாஹூதி, வேள்விகள், அலங்கரிக்கப்பட்ட 108 சங்குகளுக்கு பூஜை, மற்றும் தீபாரதனை நடந்தது. அதை தொடர்ந்து முருகனுக்கு பால், சந்தனம், பன்னீர் , இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் மற்றும் சங்காபிஷேகம் நடந்தது. பகலில் மகேஸ்வர பூஜை, அன்னம் பாலித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை கோயில் எதிரே உள்ள ஸ்தூபியில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின் கோயில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.