கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கடவுளை விருந்தினர் போலப் பாவித்துச் செய்யும் பதினாறு வகையான பணிவிடைகளை இங்கு பார்ப்போம்.1. ஆசனம் - அமர்வதற்கு தவிசு அளித்தல்2. பாத்யம் - கால் அலம்ப நீர் தருதல்3. அர்க்யம் - கை கழுவ நீர் கொடுத்தல்4. ஆசமநீயம் - பருகுவதற்கு நீர் வழங்குதல்5. அபிஷேகம் - திருமுழுக்கு நீர் ஆட்டுதல்6. வஸ்த்ரம் - அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல்.7. கந்தம் - நறுமணப் பொருட்கள் வழங்குதல்8. புஷ்பம் - மலர் மாலைகள் சூட்டுதல்9. தூபம் - அகில், சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல்10. தீபம் - ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல்.11. நைவேத்தியம் - உணவுப்பொருட்கள் படைத்தல்12. கற்பூரம் - கற்பூரம் கொளுத்திக் காட்டிப் பணிதல்13. சாமரம் - கவரி வீசுதல்14. ஆலவட்டம் - விசிறி கொண்டு வீசுதல்15. சத்ரம் - குடை கவித்தல்16. தர்ப்பணம் - கண்ணாடி காட்டுதல்.