திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பு மருதுடைய அய்யனார் கோயிலில்நவ.29ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள இந்த அய்யனார் கோயிலில் ராஜகோபுரம், தோரணவாயில்,குதிரைகள் அமைத்து திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டுநவ.27ல் மாலை 2.15 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து, இரண்டு நாட்கள் மூன்று கால யாகசாலை பூஜை நடைபெறும். நவ.29ம் தேதியன்று காலை 6 மணிக்குநான்காம் கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.பின்னர் கோபூஜை, கடம் புறப்படாகி, காலை 7.35 மணிக்குமேல் காலை 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து மகாஅபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.ஏற்பாட்டினை கோட்டையிருப்பு கிராமத்தினர் செய்து வருகின்றனர்.