Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டையிருப்பு கோயிலில் நாளை ... சிறிய கோயில்களிலும் திருப்பணி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் குளங்கள் பற்றிய அடிப்படை தகவல்கள்... ஒன்றுமே இல்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2015
11:11

சென்னை:சென்னையில், இதுவரை ௧௧௪ செ.மீ., மழை பதிவாகி இருந்தும், பல கோவில் குளங்கள் நிரம்பவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, குளங்கள் பற்றிய அடிப்படை தகவல்களே, இந்து சமய அறநிலைய துறையிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையில், கடந்த அக்., 28ம் தேதி முதல், நவ., 24ம் தேதி வரை, 114 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதில், மொத்தம் 18 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால் வெறும், 5 டி.எம்.சி., மழை நீர் மட்டுமே ஏரி, குளம் மற்றும் நிலத்தடி நீராக சேமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 13 டி.எம்.சி மழைநீர் வீணாக கடலில் கலந்துள்ளது. கடந்த ஆண்டு பருவமழையில், கோவில் குளங்கள் நிரம்பாதது குறித்து, நமது நாளிதழில், படங்களுடன் இரு பக்கங்களுக்கு விரிவான செய்தி வெளியானது. அப்போதே, இந்து சமய அறநிலைய துறை, மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறை ஆகியவை இணைந்து, கோவில் குளங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, துார்வாரி, மழைநீர் வடிகாலை துாய்மை செய்து வைத்திருந்தால், இந்த கனமழையில், பெரும்பாலான கோவில் குளங்கள் நிறைந்திருக்கும். ஆனால், ௧௧௪ செ.மீ., மழை பெதும், பல கோவில் குளங்கள் இன்னும் நிரம்பாதது, பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

*    கோவில் குளங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு, ஒவ்வொரு கோவிலுக்கும், ௪,௦௦௦ முதல் ௨௦ ஆயிரம் ரூபாய் வரை செலவழித்ததாக, அறநிலைய துறை கூறுகிறது. உண்மையில், அனைத்து கோவில்களிலும் அந்த கட்டமைப்பு முறையாக செயல்படுகிறதா என, அறநிலைய துறை பரிசோதிக்கவில்லையா?
*    பல இடங்களில் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் கலப்பதால், கோவில் குளங்களை அவற்றுடன் இணைப்பதில் பிரச்னை நிலவுகிறது. எனில், மாநகராட்சியுடன் இணைந்து, அவற்றை துாய்மை செய்வதில், அறநிலைய துறை கவனம் செலுத்தவில்லையா?
*    சென்னையில் உள்ள எந்த கோவில் குளமும் துார்வாரப்படவில்லையே, ஏன்? இதுகுறித்து விசாரித்த போது, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

அறநிலைய துறைக்கு சொந்தமான குளங்கள் எத்தனை; தனியார் கோவில் குளங்கள் எத்தனை, அவற்றின் நீளம், அகலம், ஆழம், கொள்ளளவு, படிகளின் எண்ணிக்கை என, எந்தவித அடிப்படை தகவல்களும் அறநிலைய துறை தலையமையகத்தில் இல்லை. அதேபோல், குளங்களுக்கான வரத்து, போக்கு கால்வாய் பற்றிய தகவலும் இல்லை என, தெரியவந்துள்ளது. சில தகவல்கள், அந்தந்த கோவில்களிடம் தான் உள்ளன. ஆனால் அவற்றைக் கூட அறநிலைய துறை தலைமையகம், சேகரித்து வைக்கவில்லை. இதில் வேடிக்கை என்னவெனில், சில குளங்கள் பற்றிய தகவல்கள், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திற்கே தெரியவில்லை. பொதுப்பணி துறையிடம் கேட்டு வாங்க வேண்டியுள்ளது. கோவில் செயல் அலுவலர்கள் கூறியதாவது:மழைநீர் வடிகால்களில் இருந்து குளத்திற்கான இணைப்பில், அடைப்பு, கழிவுநீர் கலப்பதால், மழைநீர் வடிகால் மூடப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில், மெட்ரோ ரயில் வேலை நடப்பதால், மழைநீர் சேகரிப்பில் பிரச்னை ஏற்படுகிறது. கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்தால், சாலைகளில் இருந்து வரும் மழை நீரை குளத்திற்கு கொண்டு வர முடியும். இதை மாநகராட்சி தான் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar