ராமநாதபுரம்: ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோவில் ஐயப்பன் கோயிலில் 18 படி சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு கோயிலில் உள்ள படிகளில் ஐம்பொன் தகடு பதிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.