திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலின் ஆடித்தபசு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தில் சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. "அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், கோமதியம்மனுக்கு சங்கர நாராயணராõக காட்சி தந்த ஆடித்தபசு விழா, இங்கு நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, கொடிமரத்தின் எதிரே கனகசண்டிகை பல்லக்கில் அம்பாள் எழுந்தருளினார்.வேத விற்பன்னர்கள் ஆகம விதிகளின் படி வேதமந்திரங்களை முழங்க, தீபாராதனை நடந்தது. காலை 6.25 மணிக்கு கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. இரவில் தங்கச்சப்பரத்தில் அம்பாள் வீதி உலா நடந்தது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. 9ம் நாளான ஆக.,9 ல் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் ஆக.,11 மாலையில் ஆடித்தபசு நடைபெறுகிறது.