பதிவு செய்த நாள்
01
டிச
2015
12:12
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, கடந்தாண்டு, டிச., 1ல், கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா மற்றும் "லகு சம்ப்ரோஷனம் என்ற சிறப்பு யாகம் நடத்த, திருப்பணி குழுவினர் முடிவு செய்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "ஆகம விதிப்படி, கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திரம், திதியை கணக்கிட்டு, அந்நாளில் சிறப்பு யாகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. யாக குண்ட பூஜை, கலச பூஜை, திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்களால், ஏதாவது தவறு நடந்திருப்பின், அதை நிவர்த்தி செய்யும் வகையில், "லகு சம்ப்ரோஷனம் நடைபெறும். கும்பாபிஷேகம் நடத்திய பட்டாச்சாரியார்களிடம், ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றனர். செயற்குழுதிருப்பூர் தமிழ்நாடு செக்யூரிட்டி தொழிலாளர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம், திருப்பூரில் நடந்தது; தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில், "குறைந்தபட்ச சம்பளத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும். மாநிலம் முழுவதும், 25 லட்சம் செக்யூரிட்டிகள் உள்ளனர். அவர்களுக்கு, தனி வாரியம் அமைக்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.