ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் கார்த்திகை இரண்டாம் சோமவார விழா நடந்தது. நேற்று காலை 10 மணிக்குமேல் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம், சிறப்பு பூஜைநடந்தது. ரகு பட்டர், ரமேஷ் பட்டர் பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று லசுவாமி தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்கள் மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. இரவு 7மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி செய்தனர்.