கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பாலராஜபுரம் சின்னமநாயக்கன்கட்டியில் விநாயகர், பகவதி அம்மன், பாலமுருகன், முனியப்பசாமி, கருப்பண்ணசாமி, கன்னிமார்கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று முன்தினம் காலை புனித நீர் கடங்கள் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின் அனைத்து ஸ்வாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதேபோல், கரூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட மண்மங்கலம் தாலுகா, ஆத்தூர் கிராமம் துண்டுபெருமாள்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் சிறப்புடன் நடந்தது.