வருடம் முழுக்க தமிழ்மாதங்களில் வரும் பன்னிரு தேய்பிறை அஷ்டமிக்கும் மாதத்திற்கு ஒரு பெயர் உள்ளது. தனித்தனி பலன்களும் உண்டு. அந்த நாளில் காலையில் சிவபெருமானையும், மாலை சூரிய அஸ்தமான நேரத்தில் பைரவரையும் தரிசிப்பதும் பின்வரும் பயன்கள் கிடைக்கும்.
1. சித்திரை - சதாசிவ அஷ்டமி - மனக்குழப்பம் தீரும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படும் 2 வைகாசி - பகவத அஷ்டமி - கடன் சுமை தீரும் 3. ஆனி - ஜயா அஷ்டமி - கல்வியில் மேன்மை அடையலாம். 4. ஆடி - நீலகண்ட அஷ்டமி - லட்சுமி கடாட்சம் பெருகும். 5. ஆவணி - ஸ்தாணு அஷ்டமி - நவகிரகதோஷம் விலகும். 6. புரட்டாசி - சம்புக அஷ்டமி - ஆயுள் விருத்தி உண்டாகும். பித்ரு தோஷம் விலகும். 7. ஐப்பசி - ஈஸ்வர அஷ்டமி - சகோதர பகை நீங்கி ஒற்றுமை ஏற்படும். 8. கார்த்திகை - ருத்ர அஷ்டமி - தனவரவு ஏற்பட்டு செல்வம் பெருகும் 9. மார்கழி - சங்கர அஷ்டமி - தொழில் விருத்தி அடையும். 10. தை - தேவதா அஷ்டமி - மனபயம் விலகும், உயர் பதவி கிடைக்கும். 11. மாசி - மகேஷ்வர அஷ்டமி - போட்டிகளில் வெற்றி பெறலாம். 12. பங்குனி - திரியம்பக அஷ்டமி - திருமணத்தடை உள்ளிட்ட தடைகள் யாவும் விலகும்.