வேலூரிலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் உள்ளது கீழ் மின்னல், ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இத்தேரோட்டத்தில் பவனி வரும் தங்கத்தேரை எவ்வித கட்டணமும் செல்லுத்தாமல் எல்லோரும் வடம் பிடித்து இழுக்கலாம். இங்கு முருகப்பெருமான் பால வடிவில் இருப்பதால், கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இத்தல வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.