அவதார புருஷர்கள் தோற்றத்தில் சாதாரண மனிதர்களைப் போல இருப்பார்கள். அவர்களும் நம்மைப் போல் கை கால்களைக் கொண்டு நம்மைப் போலவே செயல்படுவதால் அவர்களை எளிதாக நினைத்து விடக் கூடாது. அவர்களை உலக பந்தங்கள் ஒரு போதும் கட்டுப்படுத்தாது. கைதியும் சிறையில் இருக்கிறான். சிறை மேலதிகாரியும் சிறையில் இருக்கிறார். கைதிக்கு உள்ள கட்டுப்பாடுகள் மேலதிகாரிகளுக்குக் கிடையாதல்லவா?