ராசிபுரம்: ராசிபுரம் மாரியம்மன் கோவிலில், வரும், 13ம் தேதி 1,008 கலச பூஜை நடக்கிறது. ராசிபுரம் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கலச பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 1,008 காலச பூஜை வரும், 13ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், பகல், 1.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. தொடர்ந்து மாலை, 4 மணிக்கு, 1,008 கலச பூஜை நடக்கிறது. இதில் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்படுகளை கோவில் செயல் அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.