மழையால் சகதி: பெரியமாரியம்மன் கோயில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2015 11:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் முன்புறம் மழைநீர் தேங்கி சகதியாக காணப்படுவதால் பக்தர்கள் சிரமமடைகின்றனர். நகரின் மையப்பகுதியில் பெரியமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வருவர். இந்நிலையில் கோயிலின் முன்புறமுள்ள மைதானத்தில் மழைநீர் தேங்குவதால் பக்தர்கள் நடக்க முடியாத அளவிற்கு சகதியாக காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதியடைகின்றனர். கோயில் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து, கோயிலுக்கு வரும் பாதையை சீரமைக்க வேண்டும்.