கிள்ளை : சிதம்பரம் அருகே கணக்கரப்பட்டு தர்காவில் சந்தனம் பூசுதல் மற்றும் கொடியேற்று விழா நடந்தது. சிதம்பரம் அடுத்த கணக்கரப்பட்டு தர்காவில் மகான் செய்யது அலி அபிபுல்லா நினைவாக சந்தனம் பூசுதல் மற்றும் கொடியேற்று விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு கந்தூரி விழா துவங்கியது. 5 மணிக்கு பாத்தியா சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் திருவாரூர் முகம்மது நூர்தின், கணக்கரப்பட்டு தர்கா டிரஸ்டி அப்துல் சக்காப் முன்னிலையில் அப்பகுதி முஸ்லிம்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை அப்துல் காதி, தாஜ்தீன், இதயத்துல்லா, ஜியாவுதீன் உள்ளிட்ட விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.