மொடக்குறிச்சி: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், நலம் பெற வேண்டியும், சுகாதாரமாக வாழ வழி வகுக்கவும், அவல் பூந்துறை அறங்காவலர் குழு தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில், 108 பேர் விரதம் இருந்து பால் குடம் எடுத்து, அவல் பூந்துறை பாகம் பிரியாள் உடனமர் புஷ்பவனேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். முன்னதாக கோவில் குருக்கள் சிவஞானம் தலைமையில் யாகம் வளர்க்கப்பட்டது. நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.