வாழ்க்கையில் எல்லோருக்கும் சொந்த வீடு என்பது லட்சியக் கனவாக இருக்கும். அந்தக் கனவை நனவாக்குகிறது, திருவாரூர் தியாகேசப் பெருமான் கோயில். இங்கு தனிச்சன்னிதியில் எழுந்தருளியுள்ள விஸ்வகர்மாவேஸ்வரரை முறைப்படி வழிபட்டால் வீடு கட்டும் போது ஏற்படும் தடைகளும், வாஸ்து தோஷங்களும் நீங்குகின்றன. இக்கோயில் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவால் ஆண்டவனின் அருளாணைப்படி கட்டப்பட்டது.