Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

சண்டிகையான சீதை! சண்டிகையான சீதை! குரூரம்மா
முதல் பக்கம் » பிரபலங்கள்
கங்காபாய்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2015
17:57

வீர சிவாஜியின் பரம்பரையில் வந்த அரசர் நாராயணராவ் ஆற்காட்டை ஆண்டு வந்தார். அவர், மனைவியுடன் கங்காதேவியைக் குறித்து விரதமிருந்து பெற்ற பெண் கங்காபாய். அம்மா கங்காதேவி, உன் அருட்பிரசாதமே இந்தக் குழந்தை என்று வேண்டிக் கொண்டார். கங்காபாய் ஒரு பிறவி மேதை. 7 வயதில் சம்ஸ்கிருதத்தில் கவிபாடும் புலமையும், 12 வயதில் குதிரையேற்றம் வாட்பயிற்சி, ஈட்டி எறிதல் போன்ற வீர விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார். இவ்வளவு திறமைகள் இருந்தும் கங்காபாய் தனது ஆன்மிகத் தேடலுக்காக அரண்மனையைத் துறந்தார். தாமிரபரணியின் கரையில் மரவுரி தரித்து 41 நாட்கள் பஞ்சாக்னி தவம் இயற்றினார். தந்தை நாராயணராவ் மகளை வேலூருக்கு அழைத்து வந்த சில நாட்கள் அவர் காலமானார். கங்காபாய். தம்பி, நம் நாட்டின் இன்றைய நிலையில், நமது கோட்டையை நவீன முறையில் பலப்படுத்த வேண்டும். என்று கேட்டுக் கொண்டாள். உடனே அவன், சரி அக்கா. பாதுகாப்பு மற்றும் அரசாட்சி முறைகளை எனக்கும் கற்றுத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டான்.

அவளும் சரி தம்பி என்று கூறி, ஆட்சியில் இளவரசி கங்காபாய் தன் தம்பியைப் பயிற்றுவித்து வந்தார். ஆட்சியில் பொறுப்பேற்ற கங்காபாயை ஆங்கிலேய அரசு சந்தேகப்பட்டு திருச்சி சிறையில் அடைத்தது. திருச்சி சிறையிலிருந்து விடுதலையாகி ஆன்மிக வேட்கையால் நைமிசாரண்யம் சென்று தவமியற்றினார் கங்காபாய். ஒரு நாள் அங்குள்ள கவுரி சங்கர் கோயிலிற்குச் சென்றார். பண்டா அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. கவலையுற்றாள்,  கங்காபாய். உடனே கங்கைக்கு வந்து தாயே கங்கா, இதோ என் பூஜைப் பொருள்கள் அனைத்தையும் உன்னிடமே சமர்ப்பிக்கிறேன். விரைவில் கவுரிசங்கர் மகாதேவருக்கு ஒரு கோயில் எழுப்பி, மக்கள் தடையின்றித் தரிசிக்க, வழிபட எனக்கருள் அம்மா என்று வேண்டிக்கொண்டாள். கங்காபாயின் நீண்ட காலத்தோழியான ஆங்கிலேயே யுவதி பியூட்டி ராஜ்புதானா கமிஷனர் தாம்ஸனை மணந்தவர். அவர்களின் உதவியால் 15 நாட்களில் கவுரிசங்கருக்குக் கோயில் எழுப்பினார் கங்காபாய்.

இந்த கோயிலிற்குள் அனைவரும் சென்று தரிசிக்கலாம். இனி யாரும் ஏழைகளைத் தடுக்க முடியாது என்று உத்தரவு போட்டனர். வந்துள்ள பக்தர்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவா! என்று கோஷமிட்டனர். பிறகு கங்காபாய் விந்திய மலைப்பிரதேசத்தின் அடிவாரத்தில் இருந்த காளி கோயிலை அடைந்தார். இதனிடையே ஆங்கிலேயேர்களின் நாடு பிடிக்கும் பேராசையால் பல கேடுகள் விளைந்தன. உடனே கங்காபாய், அம்மா காளிதேவி! அந்நியர்கள் நாட்டைக் கூறுபோட்டு அபகரிக்க நினைக்கின்றனர். என் மக்களை இந்தத் துன்பங்களிலிருந்து காப்பற்று தாயே! என்று மனமுருக வேண்டிக்கொண்டார். கங்காபாய் புரட்சி செய்யத் திட்டமிடுவதாகச் சந்தேகித்த ஆங்கிலேயப் போலீசார் கோயிலைத் துப்பாக்கிகளுடன் சூழ்ந்து கொண்டனர். இதை பார்த்த கங்காபாய் யாரது? உங்களுக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டார். தேவியைத் தரிசிக்க வந்தோம் தாயே! என்று வந்துள்ள போலீஸ்காரர்கள் கூறினர். கங்காபாயின் தேஜஸையும் கம்பீரத்தையும் கண்ட போலீசார் தம்மையும் அறியாமல் பணிந்து சென்றனர்.

1854- இல் கிழக்கிந்திய கம்பெனி ஜான்சி ராணியின் சுவீகார மகனை அங்கீகரிக்கவில்லை, அதனால் ஜான்சியைத் தனது பகுதிகளோடு இணைத்துக் கொண்டு ஆண்டுக்கு ரூ. 6000 உபகாரநிதி வழங்கப்படும் என ஆணை பிறப்பித்தது! என்ன, கும்பெனிக்காரனா நமக்கு நிதி தருவது? என் உயிர் இருக்கும்வரை என் நாட்டை விட்டுத் தர மாட்டேன். போருக்குத் தயாராவோம், பெண்களும் போர்க்கலையில் பயிற்சி பெறட்டும் புரட்சி ஓங்கட்டும் என்று கோஷமிட்டனர். உடனே ஜான்சிராணி தனது ஆத்மார்த்த தோழியான கங்காபாயக்குக் கடிதம் எழுதி, போரில் தனக்கு மெய்க்காப்பாளராக இருக்க வேண்டும் என்று அவசரமாக வரச் சொன்னார். 1857- ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் இந்திய சுதந்திரப்போர் துவங்கியது. குவாலியரில் ஆங்கிலேயருடனான ஜான்சிராணியின் இறுதிப் போர் நடைபெற்றது. போரில் ராணி காயமுற்று வீழ்ந்துவிட்டார்! உடனே சற்றும் தாமதிக்காமல், எதிரியிடம் சிக்காமல் ராணியை அழைத்துச் செல்வோம் என்று கூறினர்.

போர்க்களத்தை விட்டுச் சென்றதும் ராணி இறந்துவிட்டார். கங்காபாயும் பலவந்த்சிங்கும் அவரை ரகசியமாகத் தகனம் செய்தனர். பிறகு 1858- முதல் 1890 வரை கங்காபாய் தாம் சென்ற இடத்திலெல்லாம் தெய்விகத்தையும் தேசப்பற்றையும் விதைத்தார். பின், வாராணசிக்கு சென்றார் வாராணசியில் சாதக் தாராநாத் என்ற துறவியைச் சந்தித்தார். மாதாஜி நீங்கள் எனக்குப் பஞ்சாக்னி வித்யையைப் போதிக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார். நீங்கள் ஆன்ம பலம் பெற வேண்டும், அத்துடன் புரட்சி வீரர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டும் என்று கூறினார். அவரும் அனைத்தையும் கற்றுக்கொண்டார். கங்காபாய் ராஜ பரம்பரையைச் சேர்த்தவர் என்பதால் அரச மரியாதை கிடைத்தது. ஆன்ம பலம் கொண்டவராதலால் சாதாரண மக்களின் ஈர்ப்பும் அவருக்கு ஒரு சேரக் கிடைத்தன. பிறகு கொல்கத்தா வந்தார் கங்காபாய். தாயே நான் என்ன செய்வேன்? கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளிகளில் உருவ வழிபாடு மூடத்தனம் என்று கேலி செய்கிறார்களே! என்று வேண்டினார். அறியாப் பெண்களின் மனதில் அந்நியர்கள் விஷத்தை விதைக்கிறார்களே! தேவி, பெண்களுக்கு நமது நாட்டைப் பற்றிய பெருமையை ஊட்ட எனக்கு அருளம்மா! என்று மனதார பிரார்த்திதாள்.

கங்காபாய், 1893, ஏப்ரல் 19 அன்று காசிம்பஜார் மகாராணி ஸ்வர்ணமயியின் பங்களாவில் 30 பெண்களுடன் கொல்கத்தா அப்பர் சாக்குலர் சாலையில் மஹாகாளி பாடசாலை யைத் தொடங்கினார். சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து 1897 - இல் தாயகம் திரும்பியிருந்தார். பெண்களுக்கு நமது சமயத்தைப் போதித்திடும் பள்ளிகள் தேவை என்பதை வலியுறுத்தி வந்தார். கங்காபாய் சுவாமிஜியை அவரது பள்ளிக்கு அழைத்தார். கங்காபாய், குழந்தைகளே! சுவாமிஜி முன்பு நீங்கள் கற்ற சாஸ்திரங்களைச் சொல்லிக் காட்டுங்கள் என்று கூறினார். அவர்களும் சுவாமிஜி முன்னால் கற்ற சாஸ்திரங்களை சொல்லிக் காட்டினர். அதைப் பார்த்த சுவாமிஜி! அதனால் மிகவும் மகிழ்வுற்ற சுவாமிஜி இந்த இயக்கம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று பதிவேட்டில் எழுதிக் கையெழுத்திட்டார். திரும்பும் போது குதிரை வண்டியில்... நமது சீடரிடம் மாதாஜி அனைத்தையும் துறந்து விட்டு நமது பெண்களுக்கு அறிவு ஒளி தந்து, உலகிற்கே லட்சியப் பெண்களாகத் திகழச் செய்யும் இப்பெரும் பணியில் ஈடுபட்டுள்ளது மனதிற்கு நிறைவைத் தருகிறது. என்று கூறினார். சீடனும், ஆம் சுவாமிஜி! மாதாஜியைப் பார்த்தது கடந்த காலத்தில் நம் நாட்டில் கல்வியில் சிறந்த கார்க்கி, கனா, லீலாவதி போன்றவர்களைப் பார்த்ததுபோல் இருந்தது என்று பெருமையாக பேசினான்.

சில மாதங்களுக்குப் பின். சுவாமிஜி, மாதாஜி நிதிப் பற்றாக்குறையால் பள்ளியையே மூடப்போவதாக அறிகிறேன். என்று சீடன் கூறினான். சுவாமிஜியும், அப்படியா! நிதியுதவிக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று அவர்களுக்குச் செய்தி அனுப்பு. என்று கூறினார். சுவாமிஜியின் அருட்கட்டளைப்படி அவரது சிஷ்யையான ஹென்ரிட்டா முல்லர் கங்காபாய்க்குப் பெரும் நிதி வழங்கினார். பிறகு ஏராளமான நன்கொடைகள் குவிந்து மகாகாளி பாடசாலை தடையின்றித் தொடர்ந்தது. பல கிளைகளும் நிறுவப்பட்டன. மாதாஜி கங்காபாய் தனிச்சிறப்பு வாய்ந்தவர் மட்டுமல்ல, அன்புத் தாயும்கூட. அவரை சந்திக்க ஒருவர் வந்தார். தாரா என்னும் குழந்தையின் தந்தை ஓர் ஏழை, மனைவியை இழந்தவர்.  மாதாஜி, இவள் என் மகள், இவளது தாய் காலமாகிவிட்டாள், நீங்களே இனி இவளுக்குக் கதி என்று கூறினார். தாரா! இனி நானே உனக்குத் தாய் என்னுடனேயே இருந்து விடம்மா என்றார் கங்காபாய். கங்காபாய் கோயிலுக்கு சென்று பூசாரியிடம், பள்ளியின் மாணவிகள் சரசுவதி பூஜையை வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள் என்று கூறினார். ஒரு பரிசளிப்பு விழா கங்காபாய் மாதாஜியின் மனதிற்குகந்த நிகழ்ச்சி, ஒருமுறை இந்த நிகழ்ச்சிக்கு சகோதரி நிவேதிதை அழைக்கப்பட்டிருந்தார்.

சாட்சாத் லோகாமாதாவே இந்தப் பெண்கள் வடிவில் வந்துள்ளாள் என்றார். இந்து மதத்திற்குச் சோதனை நேரும்போது அதைக் காக்க மட்டுமல்ல, நமது பெண்களுக்கு, எதிர்காலத் தேசத் தலைவர்களின் தாய்மார்களுக்கு, தேசப் பற்றை ஊட்டுவதிலும் ஒரு வஜ்ராயுதமாகவே நமது கங்காமாதா செயல்பட்டு வருகிறார் என்று சகோதரி நிவேதிதை கூறினார். தபஸ்வினி கங்காபாய் சுதந்திர வீரர்களின் தலைவி. அவர் அருளால் வங்காள சுதந்திர இயக்கம் விரைவில் தொடங்கும் என்றது ஸ்வராஜ் சஞ்சிகை. ராஜ குடும்பத்தில் பிறந்த மேதை, தபஸ்வினி கங்காபாய் தன் சொத்துக்களை நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்தவர். இவ்வளவு மகத்தான தியாக வாழ்வை வாழ்ந்த கங்காபாய் 1907- ஆம் வருடம் மகாசமாதி அடைந்தார். அவர் உடல் துறவிகளுக்குரிய மரியாதையுடன் பேழையில் இடப்பட்டு மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையில் ஜலசமாதி செய்யப்பட்டது.

 
மேலும் பிரபலங்கள் »
temple

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.