Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திரனின் ரத சாரதி - மாதலி கங்காபாய்
முதல் பக்கம் » பிரபலங்கள்
சண்டிகையான சீதை!
எழுத்தின் அளவு:
சண்டிகையான சீதை!

பதிவு செய்த நாள்

10 டிச
2015
05:12

மிதிலையின் அரசர் ஜனகர், சந்தான பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். யாக பூமியை பொன்னேர்பூட்டி உழுதார். ஏர் முனையில் ஏதோ தடுக்க, அகழ்ந்து பார்த்தபோது ஒரு இருப்புப் பெட்டகம். அதனுள்ளே சவுந்தர்யமான ஒரு பெண் குழந்தையும், தேஜோமயமான ஒரு வில்லும் இருந்தன. அந்தக் குழந்தையே சீதை! ஒரு முறை சீதை சிறுமியாயிருக்கையில் தன் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பந்து, வில்வைத்திருந்த பெட்டிக்கடியில் உருண்டோட, அதை எடுக்க வந்த சீதை, பெட்டியை இடக்கையால் எளிதாக நகர்த்தி பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள். ஜபம் செய்து கொண்டிருந்த ஜனகர், இதைக் கண்டு திகைத்தார். பத்துப் பேர் சேர்ந்து தூக்கி வந்த சிவதனுசு இருந்த பெட்டியை சுலபமாக நகர்த்தியிருக்கிறாள். அதனால் சிவதனுசை வளைத்து நாணேற்றுபவருக்கே இவளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்போதே தீர்மானித்துக் கொண்டார். அப்படியே ராமனுக்கு விவாகம் நடந்தது.

புஷ்கரத் தீவில் சாதுக்களுக்குத் துன்பம் விளைவித்துக் கொண்டிருந்த சகஸ்ரமுக ராவணனை சம்கரிக்க ரகுநந்தனர் படையுடன் சென்றார். கடும் போர் நடந்தது. ஒரு பாணத்தால் அனைவரையும் மூர்ச்சையுற செய்துவிட்டான் சகஸ்ரமுகன். மகாசக்தியால் மட்டுமே வெல்ல முடியும் என்று அவன் வரம் பெற்றிருப்பதை நினைவூட்டிய வசிஷ்டர், சீதாதேவியிடம் ஸ்ரீராமரும், சைன்யன்யங்களும் மயக்கமுற்றதைத் தெரிவித்தார். ஜனக குமாரி உக்கிர வடிவெடுத்து புஷ்கரம் வந்து சூலத்தை எறிய, சகஸ்ரமுகன் சேனைகளோடு அழிந்தான். ஆயினும், தேவியின் கோபம் தணியவில்லை. பயந்த தேவர்கள், நிலைமையை பரமேஸ்வரிடம் எடுத்துரைக்க உக்கிர சீதையின் சினத்தை அடக்க சீதா தேவியின் காலடியில் சவமாய் கிடந்தார் பரமேஸ்வரன்.

அப்போது ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி நினைவு பெற்று கோதண்டத்தை எடுத்தார். சகஸ்ரமுகனும், அவனது சைன்யங்களும் அழிந்துகிடப்பதைக் கண்டு வியந்து சீதையைப் பார்க்க, மைதிலி நடந்ததைக் கூறினார். அதன்பிறகு சீதை சாந்தமாகி நிற்க காளிகா சகஸ்ர நாமத்தை ஜபித்து மகாகாளி சீதையின் உடலில் ஆவிர்பித்ததற்கு நன்றி தெரிவித்தார். இதேபோல், கும்பகர்ணனின் மகன் மூலகன் பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்து ஒரு பெண்ணைத் தவிர வேறு எவராலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. என வரம் பெற்றான். அதனால் அகந்தையுற்று ராட்சச சேனைகளுடன் அட்டூழியம் நடத்தினான். என் ராட்சச வம்சம் அழிந்ததற்குக் காரணம் சீதை என்ற சண்டி. அவளைத் தேடிக் கொல்வேன் என்று தோள் தட்ட, அங்கிருந்த முனிவர், யாரைச் சண்டி என்று இகழ்ந்தாயோ அவளாலேயே உன் உயிர் பிரியும் என சபித்தார்.

விபீஷணரை வென்று சிறையிலடைத்தான் மூலகன். தந்திரமாகத் தப்பிய விபீக்ஷணர் அயோத்தி சென்று ஸ்ரீராமரிடம் முறையிட்டார். உடனே தாசரதி படைகளுடன் சென்று மூலகனோடு போரிட்டார். ஒரு சொல், ஒரு வில் என்ற வார்த்தை பொய்யாகக் கூடாது. சீதா தேவியை அழைத்து வந்து அம்பெய்யச் சொல் என்றார் நான்முகன். அதன்படி வைதேகியை அழைத்து வரச் செய்து கோதண்டத்தையும் அஸ்திரத்தையும் அவளிடம் கொடுக்க, சீதை விட்ட பாணம் மூலகன் உயிரைக் குடித்தது. சீதையால் இராவணனை நொடிப் பொழுதில் அழித்திருக்க முடியும். ஆனால், பூபாரம் குறைக்க, இராவண சைன்யத்தை வேரோடுகளைய, அசோக வனத்தில் சிறையிருந்தாள் ஜனகவல்லி என்பதை இந்த இரு போர்களும் நமக்கு உணர்த்துகின்றன.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar