கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சூத்திரம்1. சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்றதெட்சிணா மூர்த்தியுடைய பாதங் காப்பு:பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன் றுக்குள்பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை யெல்லாம்நீர்கொண்ட வூசரத்தின் மகிமை தன்னைநிசமாகச் சொல்லாமல் மறந்து விட்டார்ஆர்கொண்ட வேணியனா ருமக்குச் சொன்னார்ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.2. அறைந்திட்ட வகையேது வுப்பே ஆதிஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்மறைந்திட்ட வுப்பதுவே காரங் காரம்மண்ணான வுப்பதுவே சாரஞ் சாரம்கறைந்திட்ட வூசருக்குக் கேற்ற வுப்பைக்காணாமற் போனதினாற் கலக்க மாச்சுஇறைந்திட்ட மலசலமாய்க் காணலாகும்இந்தவிரண் டோரிடத்தி லிருக்கும் பாரே.3. இருக்கின்ற வுப்பினுக்கு மூலா தாரம்இந்துவொன் றிரவியொன்று வன்னி யொன்றுபெருக்கின்ற வீசனுக்குச் சூட்ச முந்தான்பிருதிவியே தூலமெனப் பேச லாகும்கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம்கருதையிலே யெழுதோற்றங் காண லாகும்உருக்கொண்ட சீவசெந்தும் அனேக முண்டாம்உற்றுப்பா ரண்டபிண்ட முண்மை தானே.4. தானாக நின்றதுவே பாரு மாச்சுசகலசித்துப் பிரகிருதி யுயிரு மாச்சுவானாகி நின்றதுவே சாட்சி யாகும்மன்னுயிரெல் லாஞ்சோதி மயமுமாச்சுஊனாகப் பிறந்தசடம் பிறவா முத்திக்குதவியல்லோ பிரகிருதி யோனி யோனிகோனாக நின்றகுரு வுபதே சத்தாற்குருபுகுந்தே யுப்பெடுத்துக் கொள்ளுவாயே.5. கொள்ளுவார் முப்பூவின் முதலா மங்கம்கூர்ந்துபா ரூசரத்தைக் கொள்கிக் கொண்டுவிள்ளுவார் யோனியின் படிவி டாமல்மேலேற்ற மேலுதவி மேவிற் றானால்துள்ளுவா ரிந்துப்புச் சிவமு மாச்சுதுருசுப்புப் பணவிடையாற் றொந்த மேற்றித்தள்ளுவார் பிரளயமோர் கோடி காலம்சகலசித்தும் மூலவுப்புத் தன்னி லாச்சே.6. ஆச்சப்பா மூலவுப்புக் கஞ்சு தீட்சைஆதியுப்புக் கப்படியே தீட்சை யாகும்?மூச்சப்பா தசதீட்சை யார்தான் செய்வார்?மூலகுரு செய்வார்பின் னார்தான் செய்தார்?ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம்ஏற்றிவிட்டார் முப்பத்தி ரண்டா மென்றுபேச்சப்பா பேசினதி லாவ துண்டோபிண்டவுப்புக் கேழுவிதம் பேச லாமே.7. பேசுகின்ற வுப்பினுக்கு மேலே அங்கம்பெருமையுள்ள சித்தர்கள் தாம் செய்யும் மார்க்கம்வீசுகின்ற சூதத்தின் துறைக ளெல்லாம்மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சா னாலும்பாசையினாற் சொன்னார்கள் வெளிதோன் றாதுபாலனுக்குந் தோன்றுமிந்த நூலை பார்த்தால்கூசல்மிஞ்சிப் போடுதென்று என்றன் நூலைக்குகைக்குள் மறைத் திட்டதனாற் கூறொண் ணாதே.8. ஒண்ணான நூலாகு மிருநூற் றைந்தில்ஓதிவைத்த கருத்தெரியு மிருபத் தைந்திற்கண்ணாகு மிந்த நூல் பதின்மூன் றுக்குள்கருவையொரு கற்பமுறை காட்டி வைத்தேன்வண்ணானை யறியாத பேருக் கெல்லாம்வாதியென்ற பேரேது வாத மேது?பெண்ணாணின் சுரோணிதமும் விந்துங் கண்டால்பேரான பூரணத்தின் பெருமை தானே.9. பெருமையென்ற காயசித்தி பண்ணா விட்டாற்பேரான அடியோடு முடியும் போச்சுஅருமையென்ற குண்டலிக்குள் வராகி பூசைஅப்பனே கண்டமதி லங்கெண் றூணுபுருவமையத் துள்ளேவும் மென்று கும்பிபோதமென்ற மவுன வித்தை கைக்குள் ளாச்சுதருமவித்தை பிரகிருதி மூச்சா டாதுசகத்திரத்தெண் மலர்ப்பதத்திற் சார்ந்து நில்லே.10. நில்லாத மூலிகையாற் காய சித்திநிட்டைமவு னத்தாலே யோக சித்திகொல்லாத மூலமதில் அபான சுத்திகூடாம லிருந்துவிட்டா லேது முத்தி?சொல்லாத வீசனுப்பு மதிசூ தத்திற்சூட்டினேன் வெள்ளை யென்ற சூடன் வித்தைஎல்லாரு மிருந்தவிதம் பாட மாட்டார்இதமான சூதகத்தின் வெடியுப் பாச்சே.11. உப்பான வெடியுப்புச் செயநீ ராலேஒருகோடி வித்தையெல்லா மாட லாகும்அப்பான கல்லுப்பு நீரி னாலேஆடலாந் துருசினுடை அங்க மெல்லாம்செப்பாத யோனிருது செந்நீர் மட்டாற்சிவன் வேறு தானுண்டேயிவனல் லாமல்தப்பாமற் செய்தென்ன சவுக்கா ரந்தான்சட்டிமுதற் பவுரணையுந் தாக்கிப் பாரே.12. தாக்கிப்பா ராகாசஞ் சருவ சாட்சிசதாநித்தம் அந்தரமே சாடி நின்றால்நோக்கிப்பார் வாயுலயப் படுவ தற்குநூதனமாய் வன்னியதிற் கூட வேணும்மூக்கிற்றா னோடுவது பிராண வாயுமூலமெனும் வளையமது நகாரந் தன்னைத்தூக்கித்தான் விட்டவர்க்கு யோக மெய்தும்சூரிய னந்தனிவை சொல்லும் நூலே.13. சொல்வதென்ன ரேசகத்தை வெளிவி டாதேதுடியான பூரகத்தைப் பின்னி டாதேவெல்வதென்ன கும்பகத்தை யடிவி டாதேமேலேற்று மாத்திரையை மறந்தி டாதேசெல்வதென்ன கற்பத்தை மறந்தி டாதேசெந்தூரஞ் சேர்க்கையிலே சிதறி டாதேகொல்வதென்ன அமூதயலேபிறக்கு மிந்தக்குளிகைக்குச் சாரணைசெய் குணமு முற்றே.1 எண்ணா யிரத்து லிருநூறு மந்திரம்அண்ணார் சொன்னாரடியே னறிந்தேன்சொன்னார் சிவப்புச் சோர்பச்சை ரூபம்வண்ணா னறிவான் வகாரத் திரையமேஎன்று திருமூலர் திருமந்திரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.