Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காகபுசுண்டர் உபநிடதம் சூரியானந்தர்
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
காகபுசுண்டர் குறள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2015
03:12

குறள் வெண்பா

1. சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு.

2. அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டு தரிசித்தல் கதி.

3. வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.

4. அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.

5. உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு.

6. சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.

7. சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.

8. கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண்ணு முயிர்பதியு மாறு.

9. விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.

10. நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.

11. உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.

12. கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.

13. ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.

14. முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லூண்டுநிலை சார்.

15. யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.

16. வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar