சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கிய நாள் முதல் பெய்து வந்த மழை ஒன்பது மற்றும் 10 தேதிகளில் ஓய்ந்திருந்தது.நல்ல வெயில் அடித்தது.ஆனால் நேற்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. திறந்த வெளியில் துாங்கி கிடந்த பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்க ஷெட்டுகளை நோக்கி ஓடினர். மதியம் வரையிலும் சாரல் மழை நீடித்தது. மாலையிலும் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காலநிலை நிலவியது.