சபரிமலை: பக்தர்களை சிரமப்படுத்தாமல் நான் சபரிமலை செல்ல ஏற்பாடு செய்யும் படி, எனது அலுவலகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன், என பிரதமர் மோடி கூறினார்.டிச., 14, 15ல் கேரள பயணம் மேற்கொண்ட மோடி, திருச்சூரில் கூறியதாவது: சபரிமலை தரிசனத்துடன் எனது கேரள சுற்றுப்பயணத்தை தொடங்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். எனது பயணத்தால் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால், நானே அதை மாற்றி அமைத்தேன். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத நாட்களில் சபரிமலை பயணத்திட்டத்தை தயாரிக்கும்படி, எனது அலுவலகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.