Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதை என்பதன் பொருள் மார்கழி பிறந்தது.. திருப்பாவை பட்டு சேலையில் ஆண்டாள் தரிசனம்! மார்கழி பிறந்தது.. திருப்பாவை பட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாவை தந்த பாவலர்கள்!
எழுத்தின் அளவு:
பாவை தந்த பாவலர்கள்!

பதிவு செய்த நாள்

16 டிச
2015
03:12

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளியது திருவெம்பாவை; ஆண்டாள் ஸ்ரீவல்லிபுத்தூரில் அருளியது திருப்பாவை. திருவெம்பாவையில் 20 செஞ்சொற்சித்திரங்களும், திருப்பாவையில் 30 செஞ்சொற் சித்திரங்களும் ஒளிர்கின்றன. மாணிக்கவாசகர் திருவாதவூர் தந்த அருட்செல்வர்; பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர். ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் தந்த அருட்செல்வி; விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாரால் நந்தவனத் துளசிச் செடியருகே காணப்பட்ட அற்புதக் குழந்தை.

மன்னருக்காக குதிரைகள் வாங்கச் சென்று, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்றார் மாணிக்கவாசகர். குதிரைக்குரிய பணத்தில் அறச்செயல் புரிந்து அரசுப் பணியில் பிழைபட்டார். கோதையோ கடவுளுக்கான மாலையைத் தானே சூடி அழகு பார்த்தபின் கோயிலுக்குத் தந்து சமயாச்சாரத்தில் பிழைப்பட்டாள். மணிவாசகரை சிவபிரான் ஆட்கொண்டார்; சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார். இருவருமே இறைஒளியில் கலந்தபெருமையினர்; மேலும் இறை ஒளியைத் தம்தம் அழகிய பாடல்கள் வழங்கிய அற்புதமான திவ்ய ஞானதீபங்கள்.

திருவாசகத்தின் அங்கமாகப் பன்னிரு திருமுறையில் குடியேறியது திருவெம்பாவை; நாச்சியார் திருமொழியுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை. பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழகத்தின் ஆன்மிகப் பண்பாட்டு விழிகள். பாவைப் பாட்டுகளோ அந்த இரு விழிகளை பாவைகளாக ஒளிர்பவை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar