விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மோகினி அலங்காரத்தில் பெருமாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2015 11:12
விருத்தாசலம்: வைகுண்ட ஏகாதசியொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிந்துமாதவப் பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, நேற்று காலை துவங்கியது. இதையொட்டி, பிந்துமாதவப் பெருமாள், லட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 8:00 மணியளவில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று ஏகாதசி பூஜை, நாளை (22ம் தேதி) பிந்து மாதவப் பெருமாள், தாயார் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4:30 மணியளவில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் ஆராதனை நடந்தது.