ராமநாதபுரம் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2015 10:12
பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோயில் களில் நேற்று அதிகாலை பக்தர் களின் "கோவிந்தா கோஷம் முழங்க "சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. தொடர்ந்து இராப்பத்து உற்சவம் தொடங்கியது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் டிச., 11 ல் பகல் பத்து உற்சவம் தொடங் கியது. தினமும் பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந் தருளினார். ஆழ்வார்களின் பாசுரம், பஜனை பாடப்பட்டன. 10 ம்நாளான நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பெருமாள் "மோகினி அலங்காரத்தில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு அலங்கார தீபா ராதனை நடந்தது. 5.10 மணிக்கு பெருமாள் ராஜ அலங்காரத்துடன் சொர்க்கவாசலை கடந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோயில் பிரகாரங் களில் வலம்வந்த பெருமாள், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிய பின் ஏகாதசி மண்டபத்துக்கு எழுந்தருளினார். இதையடுத்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று துவங்கிய "இராப்பத்து உற்சவம் டிச., 30 வரை தொடர்ந்து நடக்கிறது. துவாதசி திருநாளான இன்று காலை பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா வருவார். முக்கிய நிகழ்வாக மார்கழி 27ல் ஆண்டாள் - பெருமாளுடன் சேர்க்கையாகும் வைபவம் நடக்கவுள்ளது. அப்போது 100 வட்டிலில் அக்காரவடிசில் (சர்க்கரை பொங்கல்), 100 வட்டிலில் வெண்ணெய் படைக்கப்படும்.
* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், பெருமாள் காலை 6 மணிக்கு சொர்க்கவாசலைக் கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் காலை 6 மணிக்கு ராமர் கருடவாகனத்தில் காட்சி யளித்தார். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
*திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் பத்மாஸனித்தாயார் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகந்நாதப்பெருமாள் சுவாமிசொர்க்கவாசலை கடந்துவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தங்க கருட வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக பெருமாள் எழுந்தருளி புறப்பாடாகினார். தொடர்ந்து ராமர் தீர்த்த குளத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு தீர்த்தம் வாரி நடந்தது. பின் அங்கிருந்து புறப்பாடாகி, திருக்கோயில் சேதுமாதவர் சன்னதி முன்பு சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
* ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று பெருமாள் சுவாமியை தரிசனம் செய்தனர்.