கரூர்: கின்னஸ் சாதனைக்காக, ஆந்திர மாநிலம் பெனுகுண்டான் பகுதியில் நிறுவப்பட உள்ள, 90 அடி கன்னிகாபரமேஸ்வரி ஸ்வாமியின் ஐம்பொன் சிலையின் பாத பகுதி, நேற்று முன்தினம் கரூர் வந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் பெனுகுண்டான் பகுதியில் ஜனவரி மாதம், 90 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான கன்னிகாபரமேஸ்வரி சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. கின்னஸ் சாதனைக்காக இந்த ஐம்பொன் சிலை உருவாக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்வாமியின் ஒன்றரை டன் எடையுள்ள பாத உருவம், ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்தது. அதன் பிறகு, நேற்று முன்தினம் கரூர் வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயில் முன் வந்தது. இதை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பாத உருவம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.