பஞ்சபூதத் தலங்களுள் சங்கரன் கோயில் மண்தலம். இதற்கு அருகே தாருகாபுரம் (நீர்), தென்மலை (வாயு), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு), தேவதானம் (ஆகாயம்) ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசிப்பது புண்ணியத்தைத் தரவல்லது. குறிப்பாக மகா சிவராத்திரியன்று இந்த தரிசனம் செய்வது மகா புண்ணியம்.