சென்னை சவுகார்பேட்டையில் ஆருத்ரா தரிசன நாளன்று ஏகாம்பரேஸ்வர், அருணாசலேஸ்வரர், குமரக்கோட்டம், காசிவிஸ்வநாதர் ஆகிய நான்கு கோயில்களைச் சேர்ந்த நடராஜர்கள் சாலை ஒன்றில் சந்தித்து. ஆராதிக்கப்படும் வைபவம் சுமார் 250 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதைக் காண்போருக்கு வாழ்வில் சுபப்பலன்கள் கிட்டுவதாகச் சொல்லப்படுகிறது.