சீனா, திபெத் போன்று புத்தமதம் பரவிய நாடுகளின் எல்லாம் சிரிக்கும் புத்தர் என்ற வடிவில் செல்வத்துக்கான கடவுளை வணங்கும் பழக்கம் இருக்கிறது. வேறு பல நாடுகளிலும் செல்வத்துக்கு உரிய கடவுள் (காட் ஆஃப் வெல்த்) என்ற பெயரில் வெவ்வேறு தெய்வங்களைக் கும்பிடும் பழக்கம் இருக்கிறது. அவரவர் மரபுப்படி தெய்வங்களின் பெயர்கள் மாறினாலும் உலகின் பெரும்பாலான நாடுகளில் பணத்துக்கு உரிய தெய்வம் என்ற பெயரில் ஏதேனும் ஒரு கடவுளை கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.