சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் கோபுரத்திற்கு நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2015 12:12
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கோபுர திருப்பணிக்கு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணிஅம்மன் கோயில் சார்பில் நூறு கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. சேவுகப்பெருமாள் கோயிலில் மூலவர் சேவுகப்பெருமாள்,பிடாரி அம்மன்,கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர்,முருகன் கோயில் கோபுர விமானங்கள் அனைத்தும் தங்கமாக மாற்றும் பணி பக்தர்கள் நன்கொடையால் கடந்த ஓராண்டாக நடக்கிறது.தற்போது முருகன்கோயில் கோபுர பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி அம்மன் கோயில் சார்பில் 100 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பணிக்குழுதலைவர் அருணகிரி தெரிவித்ததாவது:கோபுர பணிக்கு நன்கொடைகேட்டிருந்தோம். எங்களை ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு அழைத்தனர். 100 கிராம் தங்கம் நன்கொடையாக ஸ்ரீ நாராயணி அம்மாள் வழங்கியுள்ளார்,என்றார்.