Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சை பட்டுடுத்தி பக்தர்கள் ... கூட்டணி கட்சிகள் உதவியுடன் பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார்: ஜோதிடர் கணிப்பு கூட்டணி கட்சிகள் உதவியுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புட்டபர்த்தியில் புத்த பூர்ணிமா விழா: கோலாகல கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
புட்டபர்த்தியில் புத்த பூர்ணிமா விழா: கோலாகல கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

01 மே
2026
07:05

புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் புத்த பூர்ணிமா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள, சாய் குல்வந்த் அரங்கில், இரண்டு நாட்கள் புத்த பூர்ணிமா விழா நடக்கிறது. இன்று காலை 8:00 மணிக்கு வேத பாரயணத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 8:20க்கு விழா பற்றிய அறிமுகம்; 8:25க்கு புத்த துறவிகள் ஊர்வலம், 8:35க்கு விளக்கு ஏற்றுதல்; 8:40க்கு துறவிகளின் பூஜைகள், 8:50க்கு புத்த துறவி கெம்போ சம்டுக் லாமாவின் உரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை; 9:00க்கு பஜனை, மங்களாரத்தி நடைபெற்றது.

முன்னதாக நேற்று ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மற்றும் புத்த துறவிகள் ஏராளமானோர் வருகை தந்தனர். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.ஜே. ரத்னாகர் நேபாளத்திலிருந்து வருகை தந்த புத்த துறவிகளுடன் இணைந்து, சாய் குல்வந்த் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள கிழக்கு பிரசாந்தி கட்டிடத்தின் அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை, முறைப்படி திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து வழிபாடுகள் துவங்கியது.

இன்று மாலை 5:00 மணிக்கு வேதம்; 5:20க்கு தம்மிக்கா கலபுகே உரை; 5:30க்கு பால விகாஸ் சிறுவர்களின் நடனம்; 6:00க்கு தெய்வீக சொற்பொழிவு; 6:20 மணிக்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்கு வேதம்; 8:30க்கு பாரம்பரிய நாட்டுப்புற இசைக்குழு ஊர்வலம்; 8:40க்கு, ஓம் மணி பத்மே ஹும் மந்திரத்தின் கூட்டு முழக்கம்; 8:50க்கு எஸ்.எஸ்.எஸ்.எஸ்., எனும் ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் ஹிமாச்சல பிரதேச தலைவர் பேராசிரியர் யோகிந்தர் வர்மாவின் உரை; 9:00க்கு புத்த தரிசனம் பற்றிய காணொளி; 9:05க்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு வேதம்; 5:30க்கு, ரிதமிக் பீட்ஸ் பெண்கள் வழங்கும் இசை நிகழ்ச்சி; 5:40க்கு பால விகாஸ் மாணவர்களின் நடனம்; 6:00க்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar