மதுரை: உலக அமைதி, சகோதரத்துவத்துக்காக மதுரையில் மஹா மந்திர நாம கீர்த்தன கூட்டு பிரார்த்தனை ஜன.,1ல் நடக்கிறது.எஸ்.டி.எச்., ஜெயின் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சிக்கு முரளீதர சுவாமிஜி முன்னிலை வகிக்கிறார். ஆறாயிரம் பேர் பங்கேற்கின்றனர். 2007 முதல் இதுபோன்ற பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்து வரும் காட் இந்தியா டிரஸ்ட் நிறுவனம், 10வது நிகழ்ச்சிக்கு மதுரையை தேர்வு செய்துள்ளது.