சபரிமலையில் நாளை கட்டுப்பாடு: கூடுதல் டி.ஜி.பி., பேட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2015 12:12
சபரிமலை: சபரிமலையில் நாளை மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, என கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் கூறினார்.மண்டல பூஜைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சன்னிதானத்தில் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியதாவது:டிச., ௨௧, ௨௨ல் எதிர்பார்க்காத எண்ணிக்கை யில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. டிச., ௨௧ல் மட்டும் 9,200 வாகனங்கள் வந்தன. இதனால் நிலக்கல்லில் வாகனங்களை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம் பம்பை, சன்னிதானத்தில் நெரிசல் தவிர்க்கப்பட்டது. நிலக்கல்லில் வாகனங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் போது, தரிசனம் முடிந்த பக்தர்கள் ஊர் திரும்புவதால் சற்று வெற்றிடம் ஏற்படும். இதற்காக மட்டுமே நிலக்கல்லில் வாகனங்கள் தடுக்கப்பட்டன. நாளை, தங்க அங்கி வருகையை முன்னிட்டு பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பிற்பகல் 12.30 மணிக்கு பின் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியாது. தங்க அங்கி, மரக்கூட்டத்தை கடந்த பின் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவர். தங்க அங்கி 18-ம்படி வழியாக ஸ்ரீகோயில் முன்புறம் வந்த பின், மரக்கூட்டத்தில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப் படுவர். இவ்வாறு அவர் கூறினார்.