மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2015 11:12
மதுரை: மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடராஜரும் சிவகாமி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்தல அர்ச்சகர் குருவுதாசன் தர்மராஜ் சிவம் தலைமையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.