பதிவு செய்த நாள்
26
டிச
2015
11:12
திருப்பதி: திருமலையில், பிரம்மோற்சவத்தின் போது கருட சேவையை, காண முடியாத பக்தர்களின் வசதிக்காக, மாதந்தோறும், பவுர்ணமி தினத்தில், கருட சேவை நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று, மலையப்ப சுவாமி கருட வாகனத்தில், மாட வீதியில் எழுந்தருளி அருள்புரிந்தார்.
திருமலையில் ஜனாதிபதி: திருமலை ஏழுமலையானை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வழிபட்டார். டில்லியிலிருந்து வந்த, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, திருப்பதி விமான நிலையத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கவர்னர் நரசிம்மன் வரவேற்றனர். பின், திருமலைக்கு சென்ற அவரை, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
வரவேற்பு: பத்மாவதி விருந்தினர் மாளிகையில், சிறிது நேர ஓய்விற்கு பின், முதல்வர் சந்திரபாபு நாயுடு, கவர்னர் நரசிம்மனுடன் மாலை, 5:00 மணிக்கு ஏழுமலையானை தரிசிக்க வந்த அவரை, கோவில் வெளி வாசலில் அர்ச்சகர்கள் வரவேற்றனர். கொடிமரத்தை வலம் வந்த படி, ஏழுமலையானை தரிசித்து திரும்பிய பிரணாப் முகர்ஜிக்கு, ரங்கநாயகர் மண்டபத்தில், வேத ஆசீர்வாதமும், சிறப்பு பிரசாதங்கள், ஏழுமலையான் படம், 2016 காலண்டர், டைரி வழங்கப்பட்டன.