தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2015 03:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் முன் நடராஜர் பெருமாள், சிகாமியம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை தீபத்தில் 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப நெய்யை முலிகை பொருட்களுடன் சேர்ந்து “மை யாக மாற்றி முதலில் ஆருத்ரா தரிசனத்தின் போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில், நடராஜர் பெருமாளுக்கு வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.