Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ... திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்! திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2015
04:12

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ஆருத்ரா உற்சவம் நடந்தது. காரைக்கால் அடுத்த திருநள்ளார் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வர் கோவிலில் கடந்த 10 நாட்களாக நடந்த ஆருத்ரா உற்சவம் நிறைவு பெற்றது.

Default Image
Next News

ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு, காலை யாக பூஜைகள் நடத்தப்பட்டு, நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு 16 விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9.30 மணிக்கு கோ பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின் ராஜகோபுர தீபாராதனையுடன் சுவாமிகள்  4 மாட வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. வீதி உலா நிகழ்ச்சி முடிந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்த வாரி நடத்தப்பட்டது. தீர்த்தவாரி முடிந்து சுவாமிகள் கோவிலுக்கு செல்லும் வழியில் ஊடல் உற்சவம் நடைபெற்றது. இதில், அம்பாள் நடராஜர் மீது கோபித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று கதவை மூடிக் கொள்வது போன்றும், பின் சுந்தரமூர்த்தி சாமிகள் எழுந்தருளி அம்பாளுக்கும், நடராஜருக்கும் சமாதானம் செய்து வைக்கும் உற்சவம் நடந்தது. சமாதானம் செய்வதிற்காக சாமவேதங்கள் பாடப்பட்டது. பின் சுந்தரமூர்த்தி சாமிகள் சிவகாமி அம்பாளை அழைத்துக் கொண்டு நடராஜரை எதிர்கொண்டு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நடராஜர் சிவகாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் தர்மபுர ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,எஸ்.பி.,பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar