தென்கரை: சோழவந்தான் தென்கரை சாஸ்தா ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, களப பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் ரவிசுப்பிரமணியம், பரசுராமகண்ணன் பூஜை செய்தனர். சுவாமிக்கு 18 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. புலி வாகனத்தில் சுவாமி உலா வந்தார். ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.