Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூரில் மஞ்சுளால்தரா மேளம் சக்திகாமாட்சியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சக்திகாமாட்சியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
10:08

சாத்தூர் : சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றுடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி.இங்குள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று காலை துவங்கிய ஆடி பெருந்திருவிழாவை யொட்டி, கோயில் அலுவலகத்தில் இருந்து கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காசி விஸ்வநாதபட்டர், முத்துகுமாரபட்டர்களால் கொடி மரத்தில் கொடி ஏற்ற, தீபாராதனை , சிறப்பு பூஜைகள் நடந்தன. அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி , உதவி ஆணையர் மாரிமுத்து உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று ஆடி வெள்ளி என்பதால் பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாக நேற்று முன்தினமே கோயில் வந்திருந்தனர். கொடியேற்றம் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோயில் வந்து அம்மனை தரிசனம் செய்தார்.

13 ம் தேதி முடிய ஒன்பது நாள் நடக்கும் விழாவின் போது தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கின்றன. மேலும் தினமும் பக்தர்கள் காவடி, அக்னிசட்டி ஏந்தி வருதல், கயிறு சுற்றுதல் என தங்கள் நேர்த்திகடனை செலுத்துகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12 ம்தேதி அம்மன் வீதி உலா நடக்கிறது. விழாவையொட்டி சாத்தூரிலிருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar