பதிவு செய்த நாள்
28
டிச
2015
12:12
சென்னை: கர்நாடக மாநிலம், ஹரிஹரபுரா ஸ்ரீஆதி சங்கராச்சாரிய சாரதா லட்சுமி நரசிம்ம பீடத்தின் பீடாதிபதி ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிஜி சென்னைக்கு விஜயம் செய்கிறார். வரும் 27ம் தேதி முதல் ஜன., 10ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இன்று காலை, 10:30 மணிக்கு தீர்த்த பிரசாதம்; மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீசக்ர நவவாரனா பூஜை நடத்துகிறார். நாளை காலை, 10:30 மணிக்கு, அம்பத்துார் கிருஷ்ணபுரம், டோர் எண் -14, ராம் பாரதி தெருவில் தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. அன்று மாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீசக்ர நவவாரனா பூஜை நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 94483 74458 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.