பதிவு செய்த நாள்
29
டிச
2015
06:12
அகஸ்தியர் - அனந்த சயனம்
கும்பமுனி கும்பகோணம்
புலத்தியர் - பாபநாசம்
ஆவுடையார் கோயில்
திருமூலர்-சிதம்பரம்
திருமூலவர்க்கம்-- நெடுங்குன்றம்
திருமூலர் நோக்கம்- மேலைச் சிதம்பரம்
சட்டைமுனி- சீகாழி ஸ்ரீரங்கம்
கோரக்கர்-திருக்கோண மலை
கருவூரார்- திருக்காளத்தி
பதஞ்சலி- ராமேஸ்வரம்
இராமதேவர் -அழகர் மலை
அழுகண்ணர்-நாகப்பட்டினம்
நாரதர்- திருவிடை மருதூர்
மார்க்கண்டர்- கருவை நல்லூர்
மச்சமுனி-பரங்குன்றம்
மயிரேசகம், திருவானைக்காவல்
கொங்கணர்-திருப்பதி, கோடிதுறை, திருக்கணங்குடி
பாம்பாட்டி சித்தர் -திருஞாலம், துவாரகை
புண்ணாக்கீசர்-நான்கனாசேரம் காசிபர்-ருத்திர கிரி
வரதர்- தென்மலை
கன்னி சித்தர் -பெருங்காவூர்
தன்வந்திரி வசிட்டர், வைதீசர் கோயில்
போகர்-திருக்கழுக்குன்றம்
நந்தி விஸ்வாமித்திரர் காசி,
திருவாவடுதுறை காலாங்கிகடுவெளிச் சித்தர்-திருக் காஞ்சீபுரம்
இடைக்காடர் கவுதமர் திரு-வருணைசேது, திருவிடை மருதூர்.
கமலமுனி சந்திரானந்தர்- மதுரை
சுந்தரர் - ஆரூர்
வாரிக்ஷ -திருவாஞ்சி
காலாங்கி- திருக்குடையூர், திருப்பணந்தாள்,
வால்மீகர்-அகப்பேய்ச் சித்தர்
எட்டிக்குடி -திருவையாறு
போகநாதர்- பழனி கதிர்காமம்
திருச்செந்தூர்-தணிகை, பரங்குன்றம்
இவ்வகைகள் போகர் 500ல் கூறப்பட்டிருக்கின்றன.
போமடா வெளியோடே வெளிதான் சேரும்!
புதுமையடா வாயுவொடே வாயு சேரும்.
ஊளமடா தீயோடே தீதான் சேரும்
உத்தமனே அப்புடனே அப்புச் சேரும்.
ஆமடா மண்ணுடனே மண்தான் சேரும்
அவரவர்க னினத்தோடே அவர்கள் சேர்ந்து
தாமடா தன்னிலையி லறிவை யூக்கிச்
சதானந்த பூரணமா யிருந்து வாழே.
இருந்தறிவு சுழிமுனையில் புக்க தானால்
ஏகாந்த மானதொரு லிங்க மாகும்.
அருந்தவஞ்சேர் அவ்வறிவு ரவியில் சேர்ந்தால்
அரகரா சத்தியமய மான தெய்வம்
புரிந்தறிவு மதிதனிலே சேர்ந்து நின்றால்
புத்தியில்லாப் பிறவியிலே புகுவான் பாரு;
வருந்திமனக் கனிவாலே குருவைக் காத்து
மதிகதிரில் நின்றகுறி வணங்கிப் பாரே.
60 நாழிகை கொண்டது ஒரு நாள், நாழிகை ஒன்றுக்குச் சுவாசம் 360; 60 நாழிகைக்குச் சுவாசம் 21600.
நாள் ஒன்றிற்கு 2 லட்சத்துப் பதினாயிரம் நொடி; நொடி 60 கொண்டது ஒரு விநாடி,60 விநாடி கொண்டது ஒரு நாழிகை; நாழிகை 60 கொண்டது ஒரு நாள்; 360 நாள் கொண்டது ஒரு வருடம்; 21600 நாழிகை கொண்டது ஒரு வருடம் 21600ஐ 80-ஆல் பெருக்கக் கிரேதாயுகமாம்: 60 ஆல் பெருக்கத் திரேதா யுகமாம்; 40 ஆல் பெருக்கத் துவாபர யுகமாம் 20 ஆல் பெருக்கக் கலியுக மொத்த ஆண்டாகும்.
யுகந்தோறும் மகான்கள் பெற்ற தபோ பலத்தால்; அரசு சிருஷ்டியாதிகள் நடத்தி வருவதாகக் கூறியிருக்கின்றனர்.
அடியிற் காணும் ஔஷதங்களை உபயோகப்படுத்தும் போது அறுசுவை, புகையிலை, அபினி, கள், சாராயம் பெண் போகம், மச்ச மாமிசங்கள், கோபம் அதிக நித்திரை நீக்கவும்.
1. மேநீர் நீங்கிச் சுத்த உதிரம் பெரும்: பாலில் வேக வைத்த நெல்லிக்காய்ச் சூரணம் சுத்தி செய்த நெல்லிக்காய்ச் கந்தகத் தூள் சமனெடையாகக் கூட்டி, அரை விராகனெடை தேனில் குழைத்து, நாளைக்கு இருவேளையாக ஒரு மண்டலம் கொள்ளவும்.
2. மலக்குற்றம் நீங்க: கடுக்காய் 4 திப்பிலி 1. சுக்கு 2. சீரகம் 1. ஓமம் 1. திப்பிலி மூலம் 1. இந்துப்பு 1. சூரணங்கள் தனித்தனி செய்து மேலே கண்ட எடைகளாகக் கூட்டி கடிகைச் சூரணம் வெந்நீரில் கொள்ளவும்.
3. அய்யச் சீதம் கழல: வெள்ளைக் காக்கணவேர், கடுக்காய், நெல்லி வற்றல் ஒவ்வொன்றும் புன்னைக்காயளவு 4 பலம் சிற்றாமணக்கு நெய்யில் கலந்து காலையாக 3 நாள் உள்ளுக்குக் கொள்ளவும்.
4. தேகத்திலிருக்கும் சுண்ணாம்பு நீங்க: பச்சை மஞ்சள் சமூலம் 8.1 ஆக வடித்து, பூநீர், சுழஞ்சு அரையும் படிகாரச் சுன்னம் கழஞ்சு அரையும் கூட்டிக் கொள்க. இவ்விதம் 3 நாள் கொள்ளவும்.
5. வாய்வு நீங்க: சுக்கு மிளகு, திப்பிலி, சீரகம் இந்துப்பு, கருவேப்பிலைச் சூரணம் வகைக்குப் பலம் ஒன்று பொரித்த காயம் பசும்பால் கூட்டிக் கடிகைப் பிரமாணம் அனைத்திலிட்டுப் புசிக்கவும்.
6. தாகம் மயக்கம், சூடு, மூர்ச்சைக்கு: தாளிசபத்திரி, சுக்கு சீரகம் வகைக்குப் பலம் ஒன்றாகக் கியாழம் வடித்துக் கொள்வதாலும் அதி மதுரம் சிறு தேக்கு, பனங்கற்கண்டு கியாழம் வடித்துக் கொள்வதாலும் நீங்கும்.
7. மேகவெட்டை மூலச்சூடு காந்தல் பித்தவெறி கபாலப் பித்தம் தீர: சுத்தி செய்த சீந்திற்கொடிச் சூரணம், கற்கண்டு கூட்டிக் கடிகைப் பிரமாணம், தேனில் ஒரு மண்டலம் கொள்வதாலும், கரந்தைச் சூரணம் 4. சீனி 1 கூட்டிக் கடிகைப்பிரமாணம் 10 நாள் கொள்வதாலும் நீங்கும்.
8. மேகநீரால் சருமத்தில் காணும் வியாதிக்கு: கீழா நெல்லிச் சமூல சூரணம் சீனி, நெய், தேன் கூட்டிப் பாகப்படுத்தித் தான்றிக்காய்ப் பிரமாணம் 6 மாதம் அல்லது ஒரு வருடம் உட்கொண்டு வரக் குட்டவியாதியும் தீரும்.
9. கண் துலக்கமாய் நரை வாராதிருக்க: காக்கணம், மேனி, கரந்தை வல்லாரை, அவுரி, பொற்றலை, பொடுதலைப் பிரமாணம் தேனில் ஒரு மண்டலம் கொள்க.
10. மந்தபுத்தி மதிமயக்கம் சோகை, எரிபித்தம், நீர்க்காட்டு மலபந்தம், பித்த மூர்ச்சை நீங்க: மேனி, சிறு செருப்படை,
கரிசலை சமனெடைச் சூரணம் கூட்டி இவைகளுக்கு 4 க்கு கற்கண்டு கூட்டி மண்டலம் கொள்க.
11. உதிரத்தில் மேகநீர் நீங்க: திரி கடுகமும், ஓமமும் வறுத்துத் தூளாக்கிப் பனைவெல்லப்பாகில் கிளறி, உதயத்தில் கழற்சிக்காய்ப் பிரமாணம் உட்கொண்டு வரவும்.
கருங்குருவைப் பச்சமுதும் சிறுபயறுங் கூட்டிப் பொங்கி, சர்க்கரைத் தேன் ஆவின்பால் முப்பழங் கூட்டி உண்பதும் மேல்கண்ட அமுதும் பசும் பாலும் கூட்டிப் பொங்கி தேங்காய்த் துருவலும் சர்க்கரையும் கூட்டி உண்பதும் முன்னமுதும் துவரைப்பருப்பும் பொங்கித் தேங்காய்த் துருவல் சர்க்கரை நெய் கூட்டி உண்பதும், அமுது பொங்கி, ஏலரிசித் தூளும் சர்க்கரையும் கூட்டி உண்பதுமுண்டு, அமுது, சீரகம், சர்க்கரை கூட்டி உண்ணப் பித்த மயக்கந் தீரும்.
கிராம்புக் கியாழத்தில் அமுதிட்டுப் பொங்கி, சர்க்கரை கூட்டி உண்டு வர மூலவியாதி தீரும்.
பருத்திக்கொட்டையின் பாலையெடுத்து அமுதிட்டுப் பொங்கிச் சர்க்கரைதேன் கூட்டி உண்டுவர, மேகம் நீங்கித் தாதுக்கள் வலுப்படும்.
பழயை கம்பு அல்லது தினையைப் பசுவின் பாலில் பொங்கிச் சர்க்கரை தேன் கூட்டி உண்டுவர, தசையிலுள்ள பித்த நீர்கள் நீங்கிக் குளிர்ச்சியாகும்.
அமுதும் பயறும் ஆவின்பாலும் பொங்கிக் கருவேப்பிலை மிளகு சூரணம் அமுரி உப்புக் கூட்டி உண்பதுமுண்டு.
இதில் கண்டவைகளில் தனது சரீரத்தன்மைக்கு ஒற்றுமையானதாகப் பாகப்படுத்திக் கொள்க.
ஆகாரம்:
உச்சிக்கால போஜனம் செய்து இரவில் ஆவின்பாலை உட்கொண்டு தமது சாதனத்தில் இடைவிடாமலிருப்பவர்கள், சத்துவகுணமுடையவர்களாவார்களென்று கர்ப்பநூலில் அனுபவிகள் கண்டிருக்கின்றார்கள்.
கண்டத்தில் சுபம் காலனாயிருப்பதால் ஆவின் நெய்யுடன் பொற்றலை ரசம் சமனாகக் கூட்டி ரவியில் வைத்துச் சுண்டிய பிறகு உதியத்தில் பெரு விரலில் கொஞ்சமெடுத்து உண்ணாவில் தேய்த்துவரக் கபங்கள் நீங்கும்.
கபாலக்கொதிப்பும் நேத்திர எரிவும் சூட்டினாலிருந்தால்; ஆவின் பால் படி 3. பொன்னாங்காணி ரசம் படி கூட்டி காய்ச்சி இறக்கிக் கீழ்வைத்து ஆறிய பிறகு பிரை மோர் விட்டு மறுநாள் மத்திட்டுக் கடைந்து வெண்ணெயெடுத்து உருக்கி நெய்யாக வடித்து வைத்துக் கொண்டு பக்ஷத்திற்கொருதரம் சிரசில தேய்த்து ஸ்நானஞ் செய்து வரக்குணமாகும்.
பஞ்ச கர்ப்ப ஸ்நானம்: நெல்லிப் பருப்பு வேப்பம் பருப்பு, மிளகு, கஸ்தூரி மஞ்சள், கடுக்காய் இவ்வைந்தும் ப
சும் பாலிலரைத்து சற்றுக் கொதிப்பித்து சிரத்தில் தேய்த்து ஸ்நானஞ் செய்து வர வேண்டும்.
சிலர் அம்பாள் பூசை செய்வதாக மது மாமிசாதிகளைப் படைத்து, அவற்றைத் தாங்களுண்டு சுபாவகுணத்தையும் போக்கிப் போதைமயக்கத்தில் ஆழ்ந்துவர்.
மதுவுண்டா நாங்களெல்லாம் ஞானிகளானோம்? ஆத்தாளுக்கென் செய்யும் கள்ளும் சுள்ளும்? என்று தவசிகாமணிகள் கூறியிருக்கின்றார்கள்.
முக்கா லுணவன்றி யெத்தேசி கட்கு முழுவுணவில்
அக்கா ரணமன்ன சாகாதி கூடி யரையதிர் பால்
சிக்கவமுதம் புகக்கிரங் காலுண்டிச் சேடம் வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும் வளியுமன்றோ?
உண்ட மறுநாள் திப்பி நீங்கி அன்னரசமாம்: 3- நாள் உதிரமாகும்: 4 ஆம் நாள் மாமிசமாகும் 5 6 நாள் மேதையாகும்: 7-8 ஆம் நாள் மச்சையாகும் இதற்குமேல் இந்திரியமாகுமென வைத்திய நூலில் கண்டிருந்தாலும் ஐரோப்பியப் பண்டிதர் கிரமமாகக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க உண்மை தெரியவரும்.
கைந்நாடித் துடிப்பு : 3 துடித்தால் 2 தரம் சுவாசம் நடக்கும். குழந்தைகளுக்கு நாடி 120 துடித்தால் சுவாசம் 314 நடக்கும். இதில் பேதமாக நடக்கில் நுரையீரலிலும் இரத்தாசயத்திலும் வியாதியாகும்.
நாடித் துடிப்புக்குக் காரணம்: இரத்தாசயத்திலிருந்து ரத்த நரம்புகளின் வழியாய் உதிரம் ஓடி வரும்போது உண்டாகும். அதிர்ச்சியே நாடியெனக் கூறப்படும். துருந்தி விரிந்து குவிதல்போல், இரத்தாசயப்பை விரிந்து நுரையீரலிலிருந்து சுத்தமான இரத்தத்தையுட்கொண்டு, திடீரெனச் சுருங்குவதினாலே, அதனுள்ளிருக்கும் இரத்தம் விரைவாக இரத்த நரம்புகள் வழியாய்ச் சென்று தேகமெங்கும் வியாபிக்கும்.
சரீர உள்ளுறுப்புகளில் விவரத்தை ஆயுர் வேதச் சுருக்கம் என்னும் வைத்திய கிரந்தத்தில் விரிவாய்க் காணலாகும்.
திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்,
நிலமத் தனை பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் முன்றுமே.
உள்ளத்தி னுள்ளே யுளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே;
உள்ளத்தி னுள்ளே யுணரு மொருவனைக்
கள்ளத்தி னாருங் கலந்தறி வாரில்லை;
வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்
பள்ளத்தி லிட்டதோர் பத்தலுள் ளாமே;
மனத்தி லெழுந்ததோர் மாயக் கண்ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங்கொள்ளார்
புறக்கடை யிச்சித்துப் போகின்ற வாறே.
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா;
உடல் கழன் றால்வேட முடனே கழறும்
உடலுயி ருண்மையென் றோர்ந்துகொள் ளாதார்
கடலி லகப்பட்ட கட்டையொத் தாரே;
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;
குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.
தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே;
உள்ளம் பெருங்கோயி லூனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சீவலிங்கம்;
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே (திருமந்திரம்)
புலஸ்தியர் 100-ல் பதினான்கு சீர்விருத்தம்
காணுமூச் சடக்கி விழியது முருட்டிக் கபாலமுந் திறந்தனர் கோடி:
கனத்தவாய் வதனால் குன்மநோய் அணுகிக் கலங்கினா ரவரொரு கோடி;
தோணுமெய் மறந்து சுழன்றுட னெழும்பிச் சொக்கினோ ரவரொரு கோடி;
சூலைவாய் வணுகிச் சுவாலையு மெழும்பிச் சுரமதா லிறந்தனர் கோடி;
ஊணவுண் ணாக்கண் ணாக்கையுள் தூக்கி யுள்ளடங் கினர்களுங் கோடி:
உயரசாணீள முழுவது மெழும்பி ஓங்கியே ஒடுங்கினோர் கோடி:
பேணதிசாரப் பேதிவந் தணுகிப் பிறவியு மிழந்தனர் கோடி;
பெருமையாய்க் காப்ப சாதனை யிறயாப் பிராணனுமழிந்து மாண் டனரே.
இனமறி யாம லிருத்தியே வாய்வை இறந்தன ரவரொரு கோடி:
இனியதம் பானஞ்செய் தெழும்பியே கும்பித் தேங்கினாரவ ரொரு கோடி:
கனமறி யாமல் கரத்தைவா யுவினால் கருதியே யிறந்தனர் கோடி:
கண்டுவா சியினி லொன்றைவிட்டொன்று கலங்கியே மடிந்தனர் கோடி;
தினமொரு நாழி வாசிகொண்டிழுத்துச் சிவபுர மேகினோர் கோடி:
தெனிந்திடு கண்மூக் கெனுமதைப் போற்றிச் சிறந்தன ரவரொரு கோடி;
தன்பெரு விரலா லண்ணாக்கை யேற்றித் தயங்கின ரவரொரு கோடி:
சலமதில் மூழ்கிச் சாதலை யதீதச் சாக்காடு வந்தெய்தினோ ரறிந்தே
அறிவதிவ் வாறின் கருத்தினை யம்ம அவனியின் மாந்தருட் சிலபேர்:
அம்புவி தனிலே மறையவுங் குறிசெய் ததனிலும் பதுங்கினோர் கோடி:
சரிந்திடு கதலி வாழையின் குலைபோல் தத்தளித் தனவவை போலும்;
தயங்கின ரனேகர் சாகர மதனில் தாம்விழுந் தலைவது போலும்;
தரணியிற் சிலபேர் தாமரை யிலைதண் ணீரெனத் தவித்தன ரப்பா:
பாருல கதீதம் தேடியும் குருவின் பதமடை யாமலும் மாண்டார்:
தெரிந்துமிப் பரிசே யுத்தம ரனேகர் தெளிந்தவ ரறிந்துமே செப்பச்
சீறறிடும் வாசி யோகத்தின் பெருமை திருத்தமா யுரைத்திட லாமே!
வாசியோ கத்தின் மகத்துவ முரைக்க வருக்கரே சகத்தின் திறப்பை
மாத்திரை முப்பத்திரண்டுமே வளமாய் மாறவு மதனை நீ ரையா
வீசுபூ ரகத்தில் அறுபத்து நாலு விளங்கியே மாறிமாறி டவும்
வீகற்பம்வந் தணுகா வாசிநின் றுலவு மேகுறி திறவுகோலறிதல்
பாசம்வந் தணுகா கும்பக மதில்பதி னாறென அறிந்துமேதீரு:
பழக்கமி தாகு மகத்துக ளுரைக்கும் பரிபூரணானந்த திட்சை
பூசித மாகும் வாசிதான் வசியம் பொருந்திடுங் கால்தலை மாறி;
புனல்சொரிந் திடவும் சுழியது நாடிப் புகலவும் சூட்சமி தாமே:
நாடிடு மினிகேள் மாராச யோகம் நாட்டுவேன் வயிராக்ய ஞானம்:
நடத்தையென் றறிய வாசியோ கத்தின் நற்குறி விளக்கவும் நடத்தைத்
தேடுபூ ரகத்தில் முப்பத்திரண்டு சிவசிவா ரேசகம் பதினாறு
தெளிந்தகும் பகத்தில் அறுபத்து நாலு திருத்தமாய்த் தீருமிவ் விதமாய்க்
கோடுதப் பாமல் சுழுமுனை மேவிக் குறித்திரு கண்ணதின் கூறு
கும்பியும் வாசி யொளியது வீசும் குறிப்பதா மொளியினில் கூடக்
கூடுமே யிதுதான் மாராச யோகங் கொண்டுமாத் திரைக்கொரு தீட்சை
கோருமே யிதுபார் தலைசுற்றி நொடிக்கக் குறித்தொன்று மாச்சுதிவ் வாறே.
(திருமூலர் 3000-ல் தரவு கொச்சகம்)
ஏறுதல் பூரக மீரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பக மறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்தி ரண்டதி ரேசகம்
மாறுத லொன்றின் கண் வஞ்சகமாமே!
வளியினை வாங்கி வயத்தி லடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்:
தெளியக் குருவின் றிருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே
எங்கே யிருக்கினும் பூரி யிடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை;
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே
ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை;
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலா மிரேசகத் தாலுட பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலால முண்டா னருள் பெற லாமே.
வாமத்தி லீரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டு மிரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தா வெட்டெட்டுக்கும் பிக்க வுண்மையே.
இட்டதவ் வீடிள காதிரே சித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்ட மிருக்க நமனில்லைத் தானே.
அண்டங்க ளேழு மகண்டமு மாவியுங்
கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே;
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உண்ணின்ற சோதி யொருவர்க் கறியொண்ணாத
கண்ணின்றிக் காணுஞ் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை யாய்ந்தது மூப்பே!
நூல்: முப்பத்தைந்து