Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகான்களின் கிருபை பொருந்திய தலங்கள்: காயக் கப்பல்
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
பட்டினத்தார் ஞானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2015
06:12

(பட்டினத்தாரின் பெயரில் வேறு ஒருவர் இதனைப் பாடியிருக்கலாமெனச் சிலர் கருதுகின்றனர்).

காப்பு :             நேரிசை வெண்பா

நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்லபுத்தி
வெண்பாவாய் நூறும் விளம்பவே பண்பாக்
ககனப் பதமுறவக் கன்ம மருகக்
ககனகதிர் வேல்முருகன் காப்பு.

1. நெஞ்சுடனே தாம்புலம்பி நீலநிறத் தாளீன்ற
குஞ்சரத்தை யாதரித்துக் கும்பிட்டால் கஞ்சமுடன்
காமமுதல்: மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்
பூமிதனில் வாழ்வரெப்போ தும்,

2. எப்போ திறைவன் எழுத்தைவிட்டுத் தப்புவோம்?
எப்போ தெழுத்திரண்டை ஏத்துவோம்? எப்போது
காமன் வலையறுப்போம்? காரொளியைக் கண்டு நெஞ்சே!
ஏமன் வலையறுப்ப தென்று?

3. என்றும் பயமறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய்
நின்ற சிவ லிங்கத்தை நெஞ்சே! கேள்: உண்டுறங்கித்
தேசமெல்லாம் நின்றசைந்த தீயெழுத்தே லிங்கங்காண்
ஆசைவிந்தே ஆவுடை யாள்.

4. ஆவுடையா ளோடிருந்தேன் அருளானந் தம்பெறவே
கோவுடையாள் நின்றதினங் கூடியே பூவுடையாள்
கட்டழகி யைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சே! இரு.

5. இருவினைக்கு ளாகாதே என்னுடைமை எண்ணாதே
பெருகுசினங் கொண்டு பினற் றாதே மருவுமலக்
கள்ளமெல்லாம் விட்டுங் கரைந்து கரைந்துருகி
உள்ளுணர்ந்து நெஞ்சேபார் ஒன்று.

6. ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே
சென்று மயங்கித் திரியாதே நின்ற
நிலைபிரியா தேநெடிய நெஞ்சே! கொடிய
புலைவினையு மாற்றும் பொருள்.

7. பொருளுடைமை நம்பாதே பொய்வாழ்வை நத்தி
இருளுறவை நம்பி இராதே பொருளுறவு
கொண்டறிவினாலே குறித்து வெளியதனைக்
கண்டுபிடித் தேறுநெஞ்சே! காற்று.

8. காற்றுடனே சேர்ந்து கனலுருவைக் கண்டவழி
மாற்றி யினிப்பிறக்க வாராதே ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை
நாடியிருப் போம் மனமே! நாம்.

9. நானென தென்றுவினை நாடி அலையாதே
தானவனே யென்று தரியாய் நீ; ஏன்மனமே!
வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காணாவல் கொள்ளாய் கருத்து.

10. கருத்துவே றாகாதே கண்டிடத்தோ டாதே
விரித்துப் பலவேடம் மேவாப் பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டுச் சலமறிந்து காண் மனமே!
அஞ்செழுத் தாலொன்பது.

11. ஒன்பதுவாய்க் கூட்டை யுறுதியென்று நம்பாதே
ஐம்புல னேயென்றணுகாதே இன்பமுடன்
சிற்பரத்தி னுள்ளே தெளிந்தபர மானந்தத்
துட்பொருளே மெய்யென் றுணர்.

12. மெய்யுணர்ந்து பாரா விரிந்தகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே! செய்யதோர்;
ஆணெழுத்தும் பெண்ணெழுத்து மாகி நடுநின்ற
காணும் பொருளுரைக்குங் கல்.

13. கல்லான நெஞ்சே! கவலைக் கருத்தாகிப்
பொல்லாப் பவக்கடலில் போகாதே-எல்லாம்
செலக்குமிழி யென்றுநினை; செம்பொனம்ப வத்தைக்
கலக்கமறப் பார்த்தே கரை.

14. கரைதெரியா இன்பக் கடலில் மூழ்காதே
வரைகடந்த வாழ்வை நத்தாதே-உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே! உற்றசபையாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தி னில்

15. பாக்கியத்தைக் கண்டு பரிந்து மகிழாதே
தாக்குமிடி வந்தால் சலியாதே நோக்குமே
ஒருத்தன் றிருவிளையாட்டென்றுணரு நெஞ்சே!
கருத்தாலே நின்று கருது.

16. கருதாதே மங்கையர்கள் காமவலைக் கேங்கி
உருகாதே நெஞ்சே! ஒருவன் இருகாலைக்
காத்தயர்ந்து சேர்த்துக் கனலைக்கண் காட்டினகண்
போற்றிப்பார் ஒத்தநல்ல பொன்.

17. பொண்ணாசை மண்ணாசை பூங்குழலா ராசையெனச்
சொன்னாசை யென்றறிந்து சோராதே எந்நாளும்
ஈசன் அமைத்தாங் கிருக்குங்கா ணிம்மூன்றும்
பாசமது நெஞ்சே பரிந்து.

18. பரிந்து திரியாதே பார்வினைக்கஞ் சரதே
அறிந்துருகிச் சிந்தித் தலையேல் வருந்தி
நடந்துசித்ர நாடியிலே நாதமறி நெஞ்சே!
உடைந்திடு முன்னை உடம்பு.

19. உடம்பழிந்த பின்மனமே: ஒன்றுங் கிடையா
துடம்பழியு முன்கண் டுணரா துடம்பிற்
கருநிறத்தைச் சேர்ந்து கருமலைச்சிற் றற்றுப்
பருகு கலைமதியப் பால்.

20. பாலிருக்கும் தோல்தனத்தைப் பாராதே மங்கையர்கள்
காலிடுக்கை நத்திக் கரையாதே கோலெடுத்து
வீர மறலி வருமுன் வினையறுக்கும்
பாரவழி யின்னருளைப் பார்.

21. பார்த்தவிட மெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல் மண் நீர்வெளியாம் கண்டவெல்லாம்- மாத்திரண்ட
ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே
என்புடலும் நில்லா தினி.

22. இனியசுகம் ஐம்புலனென் றெண்ணாதே நெஞ்சே
இனிய சுகமற வாதே-இனியசுகம்
கண்டதெல்லா மெவ்வுலகு காணாத இவ்வுலகில்
நின்றதோ நில்லாத தோ?

23. நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே! நிலையில்லா
எல்லாம் பகையா யிருக்குங்காண் பொல்லாக்
கருக்குழியி லேபிறந்த கன்ம வினை யானால்
திருக்கறுக்க வேண்டுந் தினம்.

24. தினந்தினைப்போ தாகிலுந்தான் தீதறநில் லாமல்
இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் தினந்தினமும்
ஓங்காரத் துள்ளொளியை யுற்றுணர்ந்து நீ மனமே!
ஆங்கார அச்சம் அறு.

25. அச்சத்தால் ஐம்புலனாம் ஆங்காரத் தால்மேய்ந்த
கச்சத்தா னிச்சயமாய்க் கள்ளதோ மெச்சத்தான்
அண்டமெல்லாம் ஊடுருவ ஆகாச முங்கடந்து
நின்ற நிலைத்தான் நிலை.

26. நிலையறிந்து நில்லாமல் நீபாவி நெஞ்சே
அலைமதிபோ லேதினமு மானாய்; கலையறிந்து
மாரனையுங் கூற் றிருனையும்மா புரத்தை யும்புகைத்த
வீரனைத் தேட விரும்பு.

27. விரும்பித் தனித்தனியே மெய்யுணரா தேமாய்
இரும்புண்ட நீர்போல ஏகும்- கரும்பதனைக்
தின்றாலல் லோதெரியும் நெஞ்சே! தின் ஐம்புலனை
வென்றாலல் லோவெளிச்ச மாம்?

28. வெளிச்சமில்லா வீடே விளக்கேற் றினதாக்
களிசிறந்து நின்றதைக்கா நெஞ்சே! வெளிச்சமற,
தொண்ணூற் றறுதத் துவமொன்றாய்த் தோன்றுங்காண்
எண்ணிலிவை காணா திருட்டு.

29. இருட்டனைய மாய்கையா லெவ்வுலகுந் தாய
பொட்டனையே மூடைம் புலனால்-திருட்டுமன
வண்டருடன் கூடாதே வாழ்மனமே! நாமிருவேம்
கண்டுகொள்வோம் காணாதது.

30. காணா ததைக்கண்டால் கண்டதெல்லாங் காணாது
வீணாவல் கொண்டுள் மெலியாதே நாணாதே
இந்திரியத் தோடு மிணங்காதே பாவிநெஞ்சே!
செஞ்சொல்மறை அக்கரத்தைத் தேடு.

31. தேடினா லைந்துதிரு வக்கரத்தைச் சென்றுவெளி
நாடினால் நெஞ்சே! நலம் பெறலாம் வாடியே
பொல்லாப் புவிகாணப் போகமதை நம்பாதே!
எல்லாம் வெயில் மஞ்ச ளே.

32. மஞ்சனைய கூந்தல் மடவாரைக் கண்டுருகும்
பஞ்சமல நெஞ்சே! பகரக்கேள்; மஞ்சள்
மயங்காணும் இந்தவுடல் மாயவாழ் வெல்லாம்
அயன்கா ணழிசூத் திரம்.

33. சூத்திரத்தா லாடும் சுழுமுனையைத் தான்திறந்து
பார்த்திருந்தால் வாராது பாவமெலாம்-சூத்திரத்தைப்
பாராம லேயிருந்து பாவிமன மேபிறக்க
வாராம லேயிருக்க வா!

34. வாசி தனைப்பிடித்து வன்கனலோ டேசேர்த்துச்
சீசி யெனவே திரியாமல் மாசி
இருளானதைச் சேர்ந் திருந்தாயே நெஞ்சே!
பொருளா னதைமறந்து போட்டு!

35. போட்டுவிக்கும் பொல்லாப் புழுச்சொரியும் நாய்விடங்கே
கூட்டங் குலைந்து குலைந்திடுமுன் காட்டிடிற்
தாழ்வுறாய் நெஞ்சே! தராதர மாயெங்கும்
மூழ்வா னதையுயிர்போம் முன்.

36. முன்னே யயனெழுதும் மூன்றுவினை கண்டுழன்று
பின்னுந் தெரியலையே பேய்மனமே! தன்னை
அறியாதிருந்தால் அவனறி வானோ!
குறியான புத்தியென்றே கொள்.

37. கொள்ளைக்குட் பட்டுக் குடிகேட ரோடிருந்து
கள்ளக் கருத்தால் கருதாதே மெள்ள மெள்ள
ஆய்ந்தாய்ந்து பார்த்துநீ ஆறாறுக் கப்பாலே
தேர்ந்தாய்ந்து பார்த்துத் தெளி.

38. தெளிந்தநீர் பட்டமுதம் சேர்ந்தால் தெளியா
தெளிந்தநீர் காட்டா தவைபோல் தெளிந்தால்
சகலபொருள் தோற்றும் தாழ்வுறா தொன்றும்
பகலிரவில் லாத பதி.

39. பதிபசுபா சங்களையும் பற்றியுருவப்
பதிதனிலே தங்கிப் பலரும் கதிபெறவே
வீணாமோ நெஞ்சேகேள் வேதாந்தத் துட்பொருளைக்
காணாம லாமோ கணக்கு?

40. கணக்கறியா மாயக் கருவிகரணா திப்
பிணக்கறியா மற்பேதை நெஞ்சே! - இணக்கம்
அறிந்திணங்க வேண்டும் அருள் வெளியினுள்ளே
செறிந்தவிந்து நாதத்தைச்சேர்.

41. சேராதே மாய்கைதனை, சேர்ந்து கருக்குழியைப்
பாராதே நெஞ்சே! பதையாதே; சீரான்
சித்திரத்தைப் பார்த்துத் தினமனமே சித்திரத்தில்
உத்திரத்தைக் கொள்ளா யுகந்து?

42. <<உகந்தது நெஞ்சமே! ஓரெழுத்தி னாலே
அகந்தனையே சுத்தி பண்ணி யாயந்து முகந்து
குடியாம லாமோ? குலவுமல மான
மிடியா னதுதீர வேண்டு.

43. வேண்டுந் திரவியமும் மேலுயர்ந்து பள்ளியெல்லாம்
ஆண்ட திரைநாடு மம்பலமும் மாண்டுபெரும்
காடுயர்ந்தாரே மனமே! கண்டாயோ மாயனயன்.
தேடறிய ஈசன் செயல்.

44. செயபாகா நெஞ்சே! திருட்டுமலக் கோட்டைப்
பயமறவே வெட்டிப் பரப்பி -நயமான
வாசியினால் சுட்டு பதிமயங்கக் கண்டிருப்போம்
பேசிய நாம் பேசாம லே.

45. பேசாத ஞானப் பெருமைக் கிடப்பதுதான்
ஆசாபா சங்களில்லா தார்க்கல்லோ?-கூசாமல்
தேசமெல்லாம் ஓடித் திரிகின்றா யேமனமே.
ஆசாபா சங்களும் நீ யாய்.

46. பாங்களைந்து பதியி லிருந்துகொண்டு
பேசரிய காலைப் பிடித்திருக்க-நேசமுடன்
நாமிருவ ருங்கூடி நாதாந்த ஞானத்தைத்
தாமொருவ னாயிருக்கத் தங்கு.

47. தங்கு நெடுவளையில் சாலங் களுங்கடந்து
எங்கு நான் றானாயிருக்காமல் மங்கு
கருவானாய் நெஞ்சே! கரிக்கால் தூதன்
வருவானே யென்ன வகை?

48. என்னவகை செய்தோம் எமதூதன் வந்தக்கால்
பின்னையென ஒட்டானே பேய்நெஞ்சே!- சொன்ன
படியேகேள் தூதன் பரிந்துவரு முன்னே
அடிதேடிக் கொண்டே அமர்.

49. அமரும் மனம்புத்தி யாங்கார மேசித்
தமரும் பொழுதுவே றானோர்-அம்ரும்
கோவென் றுரைத்த நமன் கொண்டுபோம் போதறிவு
வாவென்றால் நெஞ்சேவா ராது.

50. வாராது நெஞ்சே! மயக்கம் வருமுன்னே
வேரானதைப்பிடித்து மேலேறிப் பாராமல்
பொய்யிலே நில்ல தே புத்திகெடா தேயிருந்தால்
மெய்யிலே நின்றறிவோம் மெய்.

51. மெய்யாறு வீடுகளாய் மேலாம் படைவீடாய்
ஐயாறு மாறும் அறுபதாய்-மெய்யாகக்
கண்டதெல்லாம் நான்காண்: காணாத தைத்தேடிக்
கண்டுருகி நெஞ்சே கனி.

52. கனியருந்த மாட்டாமல் காயருந்து கின்றாய்
கனிருசி போலாகுமோ காய்தான்? இனியதுகேள்;
நானும் நீ யுங்கனிகாண்: நடுவிருந் தேருசிகாண்;
தேனும்பா லும்போல் சிவன்.

53. சிவதலங்க ளைத்தேடிச் சீயெழுத்த றுத்துச்
சிவதலங் களைத்தேடிச் சேரா- தவதவங்கள்
பண்ணாதே நெஞ்சே கேள்: பாரவினை வந்தக்கால்
எண்ணாதே அஞ்சியேங்கா தே.

54. ஏங்காதே நெஞ்சே! கேள்: எவ்வினைகள் வந்தாலும்
ஏங்காததே சற்றும் இளைக்காதே: தாங்காமல்
கொண்டவனும் செத்தவனும் கூட்டத்தா னும்வந்தான்
இன்றுகுறித் துண்மையி தென் றெண்.

55. எண்ண ரிய நெஞ்சே! இனியநற் பாலதனை
அன்னந்தண் ணீர்நீக்கியேயருந்து தன்மைபோல்
துன்பங் களைந்து தூயவெளி யூடுருவாய்
இன்பங் களைச்சேர்ந் திரு.

56. சேர்ந்திருவோ ரும்பாலும் தேனும்போ லேகலந்து
வார்ந்ததிலே யுள்ளுரிசி வாங்காமல் போங்காலம்.
வைத்தமறக் காலன் வருவானே வந்தக்கால்
எய்த்திடுவா னெஞ்சே! எவன்?

57. எவனிருந்து நெஞ்சே! எதிர்ப்பாரு முண்டோ
கவனமற நின்று கருதின் புவனமெல்லாம்
வித்துயிரெல் லாங்கழண்டு விண்ணுடைந்த தேமனமே!
மற்றுடலை யுண்கிறதே மண்.

58. மண்ணெழுந்தும் நீரெழுந்தும் வாய்வெழுந்துந் தீயெழுந்தும்
விண்ணெழுந்துங் கூடியொரு வீடாகி நண்ணரிய
மாயமெல்லா முண்டாக்கி வைத்தான்காண் நெஞ்சே! இக்
காயமெல்லாம் நானாக் கரு.

59. கருவழிந்தால் வித்தையில்லாக் காரணம்போல் நெஞ்சே!
கருவழிந்தெல் லாம்கண்ட தெல்லாம் -கருதித்
திரியாதே! நெஞ்சே: சிவன்செயலே யல்லால்
மரியாரில் லாதக்கால் வந்து.

60. வந்ததுவும் நாதாந்த வாசனைக்கண் டேவணங்கித்
தந்திரமாய்ச் சென்று தரியாமல் அந்தரத்தில்
விட்டபட்டம் போலலைந்து வெவ்வினையி னால்மனமே!
தட்டுகெட்டுப் போகாதே தான்.

61. தானந் தவமுயற்சி தாளாண்மை யோடு நெஞ்சே!
வானம் பிளந்து வழிகூடின்-நானுமதில்
நீயு மொருநிழலில் நின்றங் கிளைப்பாறித்
தோயுமதி தானே தொடங்கு!

62. தொடங்கு வினையறுத்துச் சுற்றமெலா நீத்தே
அடங்கு மிடத்திலடங் காமல் கிடந்து
பருந்தெடுத்த குஞ்சாய்ப் பதைத்தாய் மனமே!
அருஞ்சரத் தம்மதனடி.

63. மதனசரத் தால்மனமே வையம் மயங்கி
விதனத் துறல்லால்வே றில்லை மதனாலே
தத்துச் சுகத்தைநத்தித் தானலைய வேண்டாகாண்
மெத்த சுகத்தை வெறுத்து.

64. வெறுத்துவெருக் கொண்டதுபோ ல்வீணிலே நெஞ்சே!
பொறுத்த மயக்கிற்போ காதே-குறித்தெடுத்துத்
தேடியே வாசிதனைச் சேர்ந்து கலந்தபொருள்
கூடினா லாமே குணம்;

65. குணங்கள் பலவிதமாய்க் கொள்ளாதே நெஞ்சே!
வணங்குங் குணமாக வந்து வணங்கியே
மண்டலமெ லாங்கடந்து மாவீட்டை நீதிறந்து
கண்டெடுத்துக் கொள்வாய் கனம்.

66. கனதனத்து மாதர் கழிகாதல் கொண்டே
வினையார் நகைக்குருக வேண்டா தினமனமே
சோதித்தா னல்லால் சுபகாரிய மாகப்
போதித்தால் கொள்விலையோ புத்தி?

67. புத்திதரும் வித்தைதரும் பொல்லாப்பில் லாமல் நெஞ்சே!
சித்திமுத்தி பேரின்பம் சேர்ந்திடலாம்: நித்தநித்தம்
தானந்த மானதொரு சற்குருவோ டேபழகி
ஆனந்த முண்டிருந்தக் கால்.

68. காலவழிச் சென்று கருப்பைக் குழிக்குக்கீழ்
மூலமற்ற நல்வழியே மூழ்கின்றி-மாலை
இருட்டறுத்துப் போடாமல் என்பாவி நெஞ்சே!
திருட்டுவித்தை செய்கிறாய் சென்று.

69. சென்று சிவனடியில் சேர்ந்த பெரும்பாம்பு
ஒன்றுமிகவாசியைத்தான் ஓட்டாமல் நன்றாய்
நிலையாக நில்லா தலைவாய் மனமே!
அலைவாயி னில்துரும்ப தாய்.

70. தாய்தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கி நித்தம்
காய்பறிக்கிறாயே கனியிருக்க!-தாய்தந்தை
எத்தனைபேர் பெற்றாரோ என்மனமே நாமுந்தான்
எத்தனைபே ரைப் பெற்றோம் இங்கு?

71. இங்குமங்கு மாய்மனமே! ஈடழிய வேண்டாகாண்;
அங்கம் பொருளா அறிந்துகொண் டெங்கெங்கும்;
நாமே சிவமாக நாடினால் ஞானமொழி
தாமே அருளைத் தரும்.

72. அருளில்லா தார்க்கும் அருளறிவங் காமோ?
அருளறிவு தானே ஆனந்தம்?-அருளறிவு
தேடுவதுங் கூடுவதும் சிந்தையா னந்தமுடன்
நாடுவதுந் தானறிவி னால்.

73. நாடிலெழுத் தாறும் நடுவெழுத் தீரைந்தும்
ஓடி னொருபதினா லாகுமே ஓடாய்நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோ டுறங்கி நெஞ்சே
ஓரெழுத்திலே சென் றுரை.

74. உறைகலத்தி னாய்போலே உள்ளமல மெல்லாம்
அறுத்தடைந்து நெஞ்சே அறுதி நிறைத்துப்
புளியம் பழத்தோடு போலிருக்க வேண்டும்
களியழியும் காலத்துக் கே.

75. காலங்கழித்துக் கடைவாயில் பாலுறுமுன்
வேலங் கனைய விழிமடவார் ஏலக்
குழியில் வைத்து மாரடித்துக் கூப்பிடுமுன் மாய்கைக்
கழியெடுத்துப் போடுமுன் கண் ணால்.

76. கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சே!நீ
எண்ணாத மாய்கையெல்லா மெண்ணுகிறாய் நண்ணாய்கேள்
பார்க்கவேண் டுந்தனையும் பத்தரைமாற் றுத்தங்கம்
ஆக்கப்போ காதோ உன் னால்?

77. உன்னாலே நெஞ்சமே! ஊழ்வினை வந்தாலும்
எந்நாளும் பாம்பின்வாய்த் தேரைபோல முன்னால்
அம்பிட்டுப் போகாதே ஆனந்த மெய்விளக்கு
நம்பி துணைக்குமுற்றும் நம்பு.

78. நம்பினான் றன்னை நடுவணையி லேயிருந்து
குப்பிடா தார்க்குங் குறையுண்டோ? நம்பிப்
பளிங்கொளிபோல் நெஞ்சே! பரந்திடலா மெங்கும்
விளங்கனலோ டேசேருமே.

79. ஏமன்வரு முன்நெஞ்சே எவ்வினை யு மேவென்று
சாம நடுவதனில் சார்ந்ததிலே சேமமுடன்
காலனையும் வென்றுசில காமனையும் வென்று பின்பு
பாலிக்க லாமதுநாம் பார்.

80. பாரயனும் மாலும் பரவவரு ருத்திரனும்
காரனைய வாரணத்தைக் கான்கண்டு சீராய
நக்கத் திடை நடுவே நற்ககனப் பொற்பதியில்
சொற்கனகத் தற்பதியில் தோன்று.

81. தோன்றுமே யெல்லாச் சுகமுற் றதில்மனமே!
தோன்றுமே ஆனந்தச் சுந்தரர்பின் தோன்றும்
அட்சரச்சு ருக்கினொடு மக்கரப் பெ ருக்கமுடன்
உச்சரித்து ரைக்கிறவுண் மை.

82. உண்மையிது காண்: ஒளியிருந்த வீடதுகாண்:
உண்மை சிவனிருக்கும் ஊருகாண்: உண்மை
கருமை ஒளியேழ் கதியுள் பதங்கள்
மருவுதங்கி நீ வருந்து மாறு.

83. வருந்தும் பொழுது காண் மாயையாய் நெஞ்சே!
வருந்தும் குணமாக வந்து வருந்தும்
இருவினைத் தொ டக்கறும் ஏழ்வகைப்பி றப்பாம்
கருமலத்தி ருக்கறுங் காண்.

84. காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
காண்மனமே மாலயனுங் காணரிதை காண் மனமே!
செம்பொன்னினம்பலத்துள் சேருஞ்செஞ் சொல்லென்றும்
அம்பலத்தில் ஆடு நடனம்.

85. நடனமது பார் மனமே நயனத்திடையே
நடனமது நாலாம் பதங்காண் நடனம்
பதிமதிவித் தாய்மனமே! பலகதிவித் தாயெனவே
அதிவிதசித் தாந்தமாடும்.

86. ஆடும் பதிமனமே! அம்பலத்தைச் சுட்டுநடம்
ஆடும் பரமகுரு ஆனந்தம் ஆடுகின்ற
கூத்தனைக் கூற்றிற்ற கூத்தபிரா னையசுத்தம்
நீத்தவனைச் சித்தமவைத்து நில்.

87. நில்லு நிலவறமாய் நேசமுட னேபதியில்
நில்லு பிறவியற நீ நெஞ்சே: நில்லு
கனல்மதியும் கார்மிடறும் கதிரும் மதியும்
புனலொடுசெஞ் சடையும்போற்றி.

88. போற்றித் தினமனமே! பொல்லாக் குலங்கள் விட்டுக்
காற்றுங் கனலுங் கருத்தொன்றாய்ப் பார்த்தறிவால்
சுத்தமலப் பித்தையற்றுச் சுற்றஒழி சுற்றிலுற்றுச்
சத்தமறித் துற்றதிலே தங்கு.

89. தங்கு நீ சென்று சதாசிவத்தி லேமனமே!
மங்குங் கருக்குழிக்குள் வாராமல் - தங்கும்
கருவும் புனலும் கதியும் கெதியும்
விதியும் திருத்தான வெளி.

90. வெளியில் வெளியாகி விண்ணவன் றானாய்
வெளியிலொளியா யிருக்க வெளியிற்
கரியுரித்துப் போர்த்தவனைக் கார்மதிசென் றானைக்
கருவறுத்துப் பார்த்தலே காண்.

91. காணு மனமே! கரிகா லனைவதைத்துக்
காணு முலகமெல்லாம் காணுருவாய்த் - தானு
மனவிரக மானபுலி மன்றுள் நடனப்
பணவரவின் உற்றபா தம்.

92. பாதத்தான் அஞ்செழுத் தானபர மன்சிங்க
நாதத்தா னென்று நெஞ்சே! நன்றாகப் போதத்தான்
ஆரணத்தி னோடடைந் தண்டமெல்லாம் சுட்டதிரு
நீறணிந்து கொண்டிருநித் தம்.

93. நித்தனாய்நிர்மலனாய் நின்றுலகம் மூன்றுக்கும்
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய்ப்--- பெற்ற
குருவினிற் பாதங்குளிர நினை நீ
தருமதுபற் றாமனமே தான்.

94. தானவனா காவிட்டால் சண்டாள னிற்றடிவான்
தானவனு மங்கே தரிக்கொட்டான்-மானார்
கலங்கும கலவிக் கருத்திற்றால் தான்கொடுப்பான்
இலங்கும் அடிதேர்நெஞ் சே!

95. நெஞ்சே! உனக்கு நிலவறமாய்ச் சொன்ன வெலாம்
எஞ்சாவென் சொல்லென் றிகழாதே: நெஞ்சே!
கருத்திச்சை தள்ளிக் கருதென்று செப்பின்
கருத்திச்சை தள்ளுகருத் துள்.

96. உள்ளிருந்து நெஞ்சே! உலவுஞ் சிவகுருவை
வெள்ளெருக்கின் பூச்சூடும் வேணியனை - உள்ளே
மனமுருகப் பார்த்தால் மலைசிலையாகச் சென்றால்
உனதறிவால் பார்த்துநீ ஓது.

97. ஓதிநீ நெஞ்சே! கேள்; ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை - ஓதில்
கடிய மிடியும் கடிய பிணியும்
கடியவணு காமல்காக் கும்.

98. காக்குந்தினமே கடிய பிறப்பறுத்துக்
காக்கும் பலபிணிநோய் காட்டாமல் நோக்குமந்தி
வந்து பகல்வெளியில் வாராத மன்மதனை
உந்து மதையுணர்ந்தில் வாழ்;

99.வாழுநீ நெஞ்சே! மயங்கித் திரியாதே
ஏழெழுத்துக் கப்பா லிருப்பானை - ஏழை
வருத்தந்தீர்த் தன்பன் மன்மதனில் தங்கு
பருத்தரத்தி னத்தைப் பணி.

100. பணிந்து துதிமனமே! பல்லுயிர்கட் கெல்லாம்
அணுவிலணு வாங்கியிருந் தானைத்-துணிவாய்ப்
பிறவா திருக்கவும் பேரின்ப வாழ்வைத்
திறமாக நம்பிச் செலுத்து.

நூல்: முப்பத்தாறு

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar